Published:Updated:

1 கிலோவுக்கு பதில் 1.5 கிலோ; வேகமாக வளரும் குட்டநாடன் ரக வாத்து அறிமுகம்!

குட்டநாடன் ரக வாத்து

சாதாரண குட்டநாடன் வாத்துகள் 8 வாரங்களில் 1 கிலோ எடை கொண்டதாக வளரும், தற்போது மேம்படுத்தப்பட்ட இந்த வாத்து ரகம் 1.5 கிலோ வரை வளர்ந்துள்ளது.

1 கிலோவுக்கு பதில் 1.5 கிலோ; வேகமாக வளரும் குட்டநாடன் ரக வாத்து அறிமுகம்!

சாதாரண குட்டநாடன் வாத்துகள் 8 வாரங்களில் 1 கிலோ எடை கொண்டதாக வளரும், தற்போது மேம்படுத்தப்பட்ட இந்த வாத்து ரகம் 1.5 கிலோ வரை வளர்ந்துள்ளது.

Published:Updated:
குட்டநாடன் ரக வாத்து

கேரள மாநிலத்தில் ‘குட்டநாடன் வாத்துகளை’ (kuttanad duck) அவற்றின் இறைச்சிக்காக வளர்ப்பது மிகவும் பிரபலம் ஆகும். சாதாரணமாக வளர்க்கப்படும் குட்டநாடன் வாத்துகள் 8 வாரங்களில் சராசரியாக 1 கிலோ எடையோடு வளரும் தன்மையுடையவை. திருவாழம்குன்னுவில் (Thiruvazhamkunnu) உள்ள பறவைகள் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இவ்வகை வாத்துகளை ஆராய்ச்சி செய்தனர். அவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக, கூடுதல் எடையோடு வளரக் கூடியதாக இவ்வகை வாத்துகள் இப்போது இனப்பெருக்கம் செய்கின்றன.

வாத்து வளர்ப்பு (பைல் படம்)
வாத்து வளர்ப்பு (பைல் படம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாதாரண குட்டநாடன் வாத்துகள் 8 வாரங்களில் 1 கிலோ எடை வரை வளரும். 2012-ம் ஆண்டில் இந்த வாத்துகளுக்கான சோதனை முயற்சியை தொடங்கிய டாக்டர் லியோ ஜோசப், குட்டநாடன் வாத்துகளுக்கு, ‘மரபியல் ரீதியாக தனது உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும் தன்மை உடையது’ என்பதைக் கண்டறிந்தார்.

அத்துடன், இந்தவகை வாத்துகளை மேம்படுத்தப்பட்ட ரகமாக மாற்றி பண்ணை மற்றும் வயலில் வளர்த்து வந்ததில் 1.5 கிலோ வரை வளர்ந்துள்ளது. இந்த புதிய வகை வாத்துக்கு சைத்ரா (Chaithra) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வாத்துகள் (பைல் படம்)
வாத்துகள் (பைல் படம்)

இந்த ஆராய்ச்சி குறித்து கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் ஸ்டெல்லா கூறுகையில், “2012-ம் ஆண்டு நான் ஆராய்ச்சி மாணவராக சேரும் போதே இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இந்த ஆய்வை தொடர்ந்து செய்யும்படி பயோடெக்னாலஜி துறை அறிவுறுத்தியது. எனவே நாங்கள் வாத்துகளின் மரபணு அளவுகள் மற்றும் மூலக்கூறுகள் என இரண்டு வகையிலும் பரிசோதனை செய்தோம். தற்போது இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேரளாவின் காலநிலைக்குப் பொருந்தி போவதாகவும், இதனால் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் இந்த வாத்துகள் உள்ளன. பண்ணை மற்றும் வயலில் வைத்து இவ்வாத்துகள் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் சைத்ரா வகை வாத்துகளை தாராளமாக வாங்கி வளர்க்கலாம். தற்போது இந்த வாத்துகள் திருவாழம்குன்னுவில் உள்ள பண்ணையில் மட்டும் இருப்பதால், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் குஞ்சு பொரிப்பகங்கள் உருவாக்கப்பட்டு விடும். அதன்பிறகு விவசாயிகளுக்கு, ஒரு வாத்து குஞ்சு 30 ரூபாய் என விற்கப்படும்.

கேரளா
கேரளா

இந்த ஆராய்ச்சிக்கு மத்திய அரசின் கீழ் உள்ள பயோடெக்னாலஜி துறை நிதியுதவி செய்தது. வாத்தின் எடையை மேலும் அதிகரிக்க முடிந்தால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism