Published:Updated:

கொசுக்களுக்கு ரத்தத்துக்குப் பதில் உணவு: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

பெண் கொசு ( Pixabay )

பெரும்பாலும் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதத்துக்காகவே பெண் கொசுக்கள் மனித ரத்தத்தை உறிஞ்சும். இந்நிலையில், ரத்தம் உறிஞ்சுவதில் இருந்து தடுத்து, கொசுக்களுக்கென தயாரிக்கப்பட்ட உணவை அவற்றுக்கு வழங்குகின்றனர்.

கொசுக்களுக்கு ரத்தத்துக்குப் பதில் உணவு: ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

பெரும்பாலும் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதத்துக்காகவே பெண் கொசுக்கள் மனித ரத்தத்தை உறிஞ்சும். இந்நிலையில், ரத்தம் உறிஞ்சுவதில் இருந்து தடுத்து, கொசுக்களுக்கென தயாரிக்கப்பட்ட உணவை அவற்றுக்கு வழங்குகின்றனர்.

Published:Updated:
பெண் கொசு ( Pixabay )

கொசுக்கள் நோய்களைப் பரப்புவதில் அசகாய சூரர்கள். கொசுக்களிடம் இருந்தே ஜிகா, டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா போன்ற நோய்கள் மனிதனுக்குப் பரவுகின்றன. இந்த நோய்ப் பரவலைத் தவிர்க்கும் வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

டெங்கு பரவும் விதம்
டெங்கு பரவும் விதம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் ஒரு பகுதியாக, கொசுக்களுக்கு செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுமுறையை முயற்சி செய்து வருகின்றனர். பாண்டிச்சேரியில் உள்ள ஐ.சி.எம்.ஆர் - வெக்டர் கன்ட்ரோல் ஆராய்ச்சி மையத்தில் கொசுக்களுக்கு 4 வகையான செயற்கை உணவுகள் வழங்க, தனித்துவமான உணவூட்ட சாதனம் (feeder device) உருவாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதத்துக்காகவே, பெண் கொசுக்கள் மனித ரத்தத்தை உறிஞ்சும். இந்நிலையில் ரத்தம் உறிஞ்சுவதில் இருந்து தடுத்து, கொசுக்களுக்கென தயாரிக்கப்பட்ட உணவை அவற்றுக்கு வழங்குகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து இந்த ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநரும், ஆராய்ச்சியாளருமான நிஷா மேத்யூ கூறுகையில், ``கொசுக்களுக்கு வழங்குவதெற்கென 18 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உணவுமுறை குழந்தைகளுக்கான செயற்கை உணவுகளைப் போன்றது. இதில் ரத்தத்தில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கும். ரத்தத்தைப் போன்ற சுவையில் இருக்கும். பசியோடு உள்ள பெண் கொசுக்களை கவர்ந்திழுக்கக்கூடியவை இந்த உணவுகள்.

கொசு
கொசு
Pixabay

இந்த உணவுகள் கொடுக்கப்படும் கொசுக்கள், சாதாரணமாக முட்டையிட்டு, ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குகின்றன. இன்னும் சொல்லப்போனால் மனித ரத்தம் உறிஞ்சி உயிர்வாழும் கொசுக்களைவிடவும், ஆரோக்கியமாகவும் அதிகமாகவும் முட்டைகளை இந்தக் கொசுக்கள் இடுவது தெரிய வந்திருக்கிறது. பிற்காலத்தில், தேவைப்படும் பட்சத்தில், கொசுக்களின் உற்பத்திக்கும், ஆய்வக ஆராய்ச்சிக்கும் இந்த உணவுமுறை பயனுள்ளதாக இருக்கும்.

அதோடு மனித உடலின் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே, கொசுக்களுக்கான உணவு வழங்கப் படுகிறது. இந்த வெப்பநிலையைத் தக்கவைப்பதுதான் கடினம். இருந்தபோதிலும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவி, வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஒரு வெற்றிக்கதை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.