Published:Updated:

"பலன் தராத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்" - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினப் பகிர்வு

தாமஸ் ஆல்வா எடிசன்

எடிசன் மிகத் தெளிவாகவே கூறினார். "எந்த நாளும் வேலையை நான் உற்சாகம் அளிப்பதாகத்தான் கருதி இருக்கிறேன்." பணியை ரசித்துச் செய்யும்போது அதன் விளைவுகள் சிறப்பானதாக இருக்கும்.

"பலன் தராத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்" - தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினப் பகிர்வு

எடிசன் மிகத் தெளிவாகவே கூறினார். "எந்த நாளும் வேலையை நான் உற்சாகம் அளிப்பதாகத்தான் கருதி இருக்கிறேன்." பணியை ரசித்துச் செய்யும்போது அதன் விளைவுகள் சிறப்பானதாக இருக்கும்.

Published:Updated:
தாமஸ் ஆல்வா எடிசன்
குண்டு பல்பு, கிராமபோன், திரைப்பட கேமரா போன்ற பலவற்றைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1,093 பொருள்களுக்குக் காப்புரிமை பெற்றவர்! இது அமெரிக்காவில் மட்டும். பிற நாடுகளிலும் ஏராளமான காப்புரிமைகள் அவர் வசம் இருந்தன. அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள சில பாடங்கள் உண்டு.
எடிசன்
எடிசன்

உழைக்க அஞ்சவே கூடாது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"ஒருவரை மேதை என்றால் அவருக்கு அந்த மேதைமை இயற்கையாகவே அமைந்து விட்டது என்று பொருள் அல்ல. அப்படி அமைவது ஒரு சதவிகிதம்தான். மீதி 99 சதவிகிதத்தை அவர் தன் உழைப்பின் காரணமாகத்தான் பெற்று மேதை ஆகியிருக்கிறார்" என்று கூறிய எடிசன் தினமும் 18 மணி நேரம் உழைத்தவர். ஏதோ ஓரிரு வருடங்கள் அல்ல, தன் ஆயுள் முழுவதும் அப்படி உழைத்தவர் அவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோல்வி கண்டால் மீண்டெழ வேண்டும்

வெற்றி காணும்போது உற்சாகமாக இருப்பது அரிதான விஷயம் அல்ல. தோல்வி காணும்போதும் உத்வேகத்தை இழக்காமல் மீண்டும் வெற்றி பெறுவது என்பதுதான் சிறப்பு. "என் வாழ்க்கையில் நான் தோற்றதில்லை. பலன் தராத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன் அவ்வளவுதான்" என்று கூறியவர் எடிசன். தோல்விகள் நேரும்போது அதைத் தாண்டிச் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஒரே இடத்தில் இருந்தால் நதி சுத்தமாக இருக்காது.

எடிசன்
எடிசன்

எந்தப் பணியையும் ரசித்துச் செய்யுங்கள்

எடிசன் மிகத் தெளிவாகவே கூறினார். "எந்த நாளும் வேலையை நான் உற்சாகம் அளிப்பதாகத்தான் கருதி இருக்கிறேன்." பணியை ரசித்துச் செய்யும்போது அதன் விளைவுகள் சிறப்பானதாக இருக்கும். நம் உடல் நலமும் மனநலமும் மேம்பட்டதாக இருக்கும். தனது பன்னிரண்டாவது வயதில் நாளிதழ்களையும் இனிப்புகளையும் ரயில் பயணிகளுக்கு விற்றுதான் அவர் வாழ்க்கை நடத்தினார். அந்தப் பணியையும் அவர் ரசித்துதான் செய்திருக்கிறாராம்.

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பதில் தெளிவு வேண்டும்

பலருக்கும் தங்கள் திறமையைப் பற்றிய தெளிவான கருத்து இல்லை. அதை முழுமையாக அறிந்து கொண்டால் மாபெரும் அற்புதங்களை நிகழ்த்த முடியும். எடிசனின் கண்டுபிடிப்புகள் எண்ணிக்கையிலும் விளைவுகளிலும் அசாத்தியமானவை. தன்னம்பிக்கையும் தெளிவும் இருந்த காரணத்தால்தான் எடிசனால் இந்த சாதனையைச் செய்ய முடிந்தது.

எடிசன்
எடிசன்

சுற்றியிருப்பவர்களின் திறமைகளை இனம்கண்டு ஊக்குவியுங்கள்

'எடிசன் இல்யூமினேடிங் லிமிடெட் கம்பெனி' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தபோது அங்கு ஒருநாள் வந்தார் ஹென்றி ஃபோர்டு. மோட்டார் என்ஜின் குறித்த அவரது கருத்துக்களைக் கேட்ட எடிசன் அவரை மிகவும் ஊக்குவித்தார். இறுதிவரை (எடிசன் இறக்கும்வரை) இருவரும் மிகவும் நட்போடு இருந்தனர். ஒவ்வொரு வருடமும் இருவரும் மோட்டாரில் நெடுந்​தூரம் ஏதாவது ஓரிடத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டனர். தன் கருத்துக்களை எடிசன் பெரிதும் ஊக்குவித்தது குறித்து ஹென்றி ஃபோர்டு பல நேரங்களில் தவறாமல் குறிப்பிட்டதுண்டு.