Published:Updated:

`என் கிராமத்தின் பெயர் நாசா வரை..!' - விண்வெளி செல்லும் தன் படைப்புக்கு கிராம பெயர் வைத்த மாணவர்

தனது உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன்
News
தனது உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன் ( நா.ராஜமுருகன் )

உலகின் முதல் சிறிய மற்றும் எடை குறைவான உயிரியல் பரிசோதனைப் படைப்பு, விரைவில் நாசா மூலம் விண்வெளிக்கு பயணமாகவுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

`என் கிராமத்தின் பெயர் நாசா வரை..!' - விண்வெளி செல்லும் தன் படைப்புக்கு கிராம பெயர் வைத்த மாணவர்

உலகின் முதல் சிறிய மற்றும் எடை குறைவான உயிரியல் பரிசோதனைப் படைப்பு, விரைவில் நாசா மூலம் விண்வெளிக்கு பயணமாகவுள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

Published:Updated:
தனது உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன்
News
தனது உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன் ( நா.ராஜமுருகன் )

மாணவர் டிராவிட் ரஞ்சன்

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆராய்ச்சிக்கு உதவுவதற்காகவும், அவர்களின் பரிசோதனை படைப்புகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, விண்ணுக்கு ஏவி வருகிறது நாசா. இதற்கு, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் ஆராயப்பட்டு அதில் 120 படைப்புகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படைப்புகள் Sounding Rocketகளிலும், Research Balloonகளிலும் விண்வெளிக்கு செலுத்தப்படும்.

அந்த வகையில், இந்த வருடம் idoodlEDU என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய Cubes In Space Program என்ற போட்டியில் கலந்துகொண்டு, உலகம் முழுவதும் இருந்தும் மாணவர்கள் அனுப்பிய படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 படைப்புகளில், கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டிராவிட் ரஞ்சனின் உயிரியல் பரிசோதனைப் படைப்பும் இடம்பெற்றுள்ளது.

உயிரியல் பரிசோதனைப் படைப்பு
உயிரியல் பரிசோதனைப் படைப்பு
நா.ராஜமுருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த உயிரியல் பரிசோதனைப் படைப்பு, வரும் செப்டம்பர் மாதம் நாசாவின் Columbia Facility-ல் இருந்து Research Balloon மூலம் விண்ணுக்குச் செல்கிறது. 218 அடி நீளமும், 146 அடி அகலமும் கொண்ட இந்த Research Balloon பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் அடி மேலே சென்று வளிமண்டல எல்லைக்கு மேலே நிலை பெறும். அதேபோல், இந்த உயிரியல் பரிசோதனை படைப்பு ஒரு ஃபெம்டோ வகை பரிசோதனைப் படைப்பு ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயிரியல் பரிசோதனைப் படைப்பு

இந்த உயிரியல் பரிசோதனைப் படைப்பு, கதிர்வீச்சுகளால் செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றத்தை பற்றியும், இந்த மாணவன் செடிகளிலிருந்து கண்டுபிடித்த, தி - காம்பவுண்ட் என்னும் கெமிக்கலின் திறனைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யவுள்ளது. இந்த செயற்கைக்கோள் உலகத்திலேயே மிகச்சிறிய மற்றும் மிகவும் எடை குறைவான உயிரியல் பரிசோதனைப் படைப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்து நாசாவிற்கு செல்லும் முதல் உயிரியல் பரிசோதனைப் படைப்பும் இதுவே.

 தந்தையுடன் டிராவிட் ரஞ்சன்
தந்தையுடன் டிராவிட் ரஞ்சன்
நா.ராஜமுருகன்

இந்த உயிரியல் பரிசோதனைப் படைப்புக்கு மாணவர் SMKT என பெயரிட்டுள்ளார். அதாவது, செம்மணக்கோன்பட்டி, தமிழ்நாடு என்று தன்னுடைய கிராமத்தின் பெயரை வைத்துள்ளார். இவரது தந்தை மருதமுத்து விவசாய கூலி வேலை செய்து வருகிறார். தாய் கௌசல்யா, சிறிய அளவிலான டெய்லரிங் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடை மூலமாக வரும் வருமானத்தில்தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில், இத்தகைய சாதனையை மாணவர் டிராவிட் ரஞ்சன் படைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாசா மூலம் விண்வெளிக்கு போகும் படைப்பு..!

இந்த சாதனைக் குறித்து, மாணவர் டிராவிட் ரஞ்சனிடம் பேசினோம்.

"நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால், என்னை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சு, என்னோட பெற்றோர் தங்களது சக்திக்கு மீறி செலவு பண்ணி என்னை படிக்க வைக்கின்றனர். அதனால், நான் சின்ன வயதில் இருந்தே படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தேன். சிறு வயதில் இருந்தே அறிவியல் சம்பந்தப்பட்ட விசயங்களிலும், கண்டுப்பிடிப்புகளிலும் ஆர்வம் அதிகம். ஒரு விஞ்ஞானி ஆகணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக ஏதாச்சும் அறிவியல் சம்பந்தமான முயற்சிகளை செஞ்சுக்கிட்டே இருப்பேன். இந்த நிலையில்தான், கடந்த இரண்டு வருஷத்துக்கு முன்னாடி கரூர் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் படைத்த சாட்டிலைட் ஒன்று நாசா மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன்
உயிரியல் பரிசோதனைப் படைப்புடன் டிராவிட் ரஞ்சன்
நா.ராஜமுருகன்

அதுல இன்ஸ்பயராகி, என்னோட படைப்பும் நாசா மூலம் விண்வெளிக்கு போகணும்னு நினைச்சேன். அதுக்காக, யூடியூப், ஆன்லைன் மூலமா நிறைய விசயங்களை ஆய்வு பண்ணினேன். கதிர்வீச்சுகளால் தாவரங்களில் உள்ள எஃப் காம்பவுன்ட் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன். தொடர் ஆராய்ச்சி மூலம் அதோட சில கெமிக்கல்களை சேர்த்து, ரேடியேஷன்களை தடுக்கக்கூடிய எஃப் காம்பவுண்டா மாற்றினேன். கதிர்வீச்சை என்னோட கண்டுபிடிப்பு எக்ஸ்ட்ராவா தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பதை கண்டுபிடிச்சேன்.

இந்த நிலையில்தான், அந்த என்.ஜி.ஓ அறிவிச்ச போட்டிக்கு என்னோட படைப்பை பற்றி அனுப்பினேன். அங்கு வந்த ஆயிரணக்கணக்கான படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 படைபுகளில் ஒண்ணா என்னோட இந்த உயிரியல் படைப்பும் தேர்வாகியிருக்கு. 4 சென்டிமீட்டர் வரை படைப்புகளை செய்யலாம்னு சொன்னாங்க. ஆனா நான், வெறும் 3.9 சென்டிமீட்டர் அளவிலேயே இந்த உயிரியல் பரிசோதனைப் படைப்பை செஞ்சுட்டேன். அதேபோல், வெறும் 18 கிராம் எடை மட்டும் கொண்டது இது. அமெரிக்காவில் கதிர்வீச்சு பாதிப்பு அதிகம். அதனால், இந்த பரிசோதனைப் படைப்பில் எஃப் காம்பவுண்ட் இன்ஜெக்ட் பண்ணப்பட்ட நாயுருவி, பூசணி விதைகளை வைத்திருக்கிறேன். இதன்மூலம், ரேடியேஷன் பாதிப்பு பற்றி கண்காணிக்க முடியும், எஃப் காம்பவுண்டின் ரேடியேஷனை குறைக்கும் திறன் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.

மாணவர்களுடன் டிராவிட் ரஞ்சன்
மாணவர்களுடன் டிராவிட் ரஞ்சன்
நா.ராஜமுருகன்

அதோடு, செடிகளில் ஏற்படும் மரபணு மாற்றம் பற்றியும் ஆராய முடியும். ரேடியேஷன் குறையும்பட்சத்தில், மரபணு பிரச்னை வராது. விதை முளைப்பு தன்மை குறைவு பிரச்னை வராது. கதிரியக்க பாதிப்பால் உணவு தானியங்களில் இருந்து மனிதர்களுக்கும் நோய்கள் வருது, அது தடுக்கப்படும்.

நான் எலெக்ட்ரானிக் பொருட்களை கொண்டு சாட்டிலைட் செய்து, நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்னு நினைச்சேன். ஆனா, அதுக்கு நிறைய செலவாகும் என்பதால், இப்போது இந்த உயிரியல் பரிசோதனைப் படைப்பை உருவாக்கியிருக்கிறேன். எதிர்காலத்தில் விண்வெளிக்கு பல செயற்கைக் கோள்களை அனுப்ப வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. சாட்டிலைட்கள் மூலம் மனிதகுலத்துக்கு ஆக்கபூர்வமான நன்மைகளை தேடி தரணும்னு நினைக்கிறேன்" என்றார்.

வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism