ஒரு கேம்

தம்பி தங்கைகளுக்கு ஏற்ற பஸில் கேம்!

உங்கள் நண்பர்ளுக்குப் பிறந்தநாள் பரிசு கொடுக்கத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இது சரியான தேர்வாக இருக்கும். காந்த அட்டை ஒன்றில், விதவிதமான கலர் காந்தங்களைப் பொருத்தி மீன், யானை, தாஜ்மகால், மனிதர்கள், எண்கள், எழுத்துகள் எனப் பல்வேறு உருவங்களை உருவாக்க முடியும். என்னென்ன உருவங்கள் செய்யலாம் என 200 உருவங்களுக்கு மாதிரிப் படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைக் கற்பனைத் திறன்கொண்டு உருவாக்கலாம். 400 காந்தங்கள், செய்த உருவத்தைக் காட்சிப்படுத்த ஒரு டிஸ்ப்ளே ஸ்டாண்ட், மாதிரிப் படங்கள் எனத் தேவையான அனைத்தும் இதில் இருக்கும். நல்ல பொழுதுபோக்கு ஆட்டமாக இது அமையும்.

அமேசான் லிங்க்: https://goo.gl/mcFhKc

ஒரு புத்தகம்

இது ஒரு குடைக் கதை!

எழுத்தாளர்கள்: ஏமி ஜூன் பேட்ஸ் மற்றும் ஜுனிபர் பேட்ஸ்.

கதவின் ஓரமாய் ஒரு குடை இருக்கிறது. பெரிய குடை. எவ்வளவு பெரியது என்றால், மழை பெய்யும் தருணத்தில், அனைவரும் அதனுள் தஞ்சம் புகுந்துகொள்ளலாம். நீங்கள் உயரமோ, குட்டையோ, கறுப்போ, சிவப்போ, எந்த விதமாக இருந்தாலும், யாராக இருந்தாலும், அதனுள் உங்களுக்கென்று நிச்சயம் ஓர் இடம் இருக்கும். வண்ண ஓவியங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் பிரிவினை, வன்மம், சக மனிதரை மதிப்புடன் நடத்தாமல் போவது போன்ற தவறுகள் குறித்து மறைமுகமாக நமக்குப் பல பாடங்கள் எடுக்கிறது. புத்தகத்திலிருக்கும் படங்களை வரைந்ததோடு நில்லாமல், முதன்முறையாக எழுதியும் இருக்கிறார் பிரபல ஓவியர் ஏமி ஜூன் பேட்ஸ். புத்தகத்தை அவருடன் இணைந்து எழுதியிருப்பது யார் தெரியுமா? ஆறாம் வகுப்பு படிக்கும் அவரின் மகளான ஜுனிபர் பேட்ஸ். சூப்பர்ல? அமேசான் லிங்க்: https://goo.gl/6fZej2

ஒரு ஆப்

இசை ஆர்வலரா நீங்கள்? இது உங்களுக்கு உதவும்!

உங்களில் சிலருக்கு இயல்பிலேயே இசையில் ஆர்வம் அதிகமாக இருக்கலாம். ஆனால், ஓர் இசைக்கருவி வாங்கி இசைக்க வாய்ப்புகள் இருக்காது. அதை ஈடுகட்ட, முதலில் முறையாக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள, இந்த ஆப் உதவும். பியானோவாதிக, கீபோர்டிஸ்டுகள், இசைக் கலைஞர்கள், ஆரம்பக்கால இசை கற்கும் மாணவர்கள் என அனைவருக்கும் பொருந்திப் போகும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த ஆப். பியானோ, புல்லாங்குழல், குழாய் இசைக்கருவி, கிட்டார் என நான்கு விதமான இசைக்கருவிகளை இதில் இசைக்கலாம். அதுமட்டுமின்றி, இசைகுறிப்புகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை இலவசமாகக் கொடுத்து நமக்கு இசையைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த ஆப்பை இலவசமாகக் கூகுள் ப்ளேஸ்டோரில் பெற்றுக்கொள்ளலாம்.

ப்ளேஸ்டோர் லிங்க்: https://goo.gl/j178nB

ஒரு படம்

கூடைப்பந்தாட்டத்தின் மேலுள்ள காதல்!

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை ‘கோகோ’ படம் வென்றது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை வென்ற ‘டியர் பேஸ்கட்பால்’ படம் பற்றித் தெரியுமா? வெறும் ஆறு நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடிய இது, முன்னால் கூடைப்பந்து வீரரான கோபி பிரயன்ட் (Kobe Bryant) அவர்களின் கவிதை ஒன்றிற்கு வீடியோ வடிவம் கொடுத்திருக்கிறது. கூடைப்பந்து ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட பிரயன்ட் அந்த ஆட்டத்தின்மேல் தனக்கிருக்கும் அளவுக்கதிகமான காதலை இதில் வெளிப்படுத்துகிறார். அவரே அதை விவரிக்க, ‘அலாவுதீன்’, ‘பியூட்டி அண்டு தி பீஸ்ட்’ ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ போன்ற படங்களை அனிமேட் செய்த க்ளென் கீன் (Glen Keane) இந்தக் குறும்படத்தை அனிமேட் செய்திருக்கிறார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் (John Williams) இசையமைத்திருக்கிறார்.

ஒரு வைரல் பேச்சு

சிறந்த ஆஸ்கர் பேச்சு!

இந்த வருடம் ஆஸ்கர் விருதில் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசியதாகப் பாராட்டப்பட்டவர் சிறந்த துணை நடிகர் விருதை வென்ற சாம் ராக்வெல் (Sam Rockwell). விழா மேடையில் பேசிய அவர், “எனக்கு எட்டு வயது இருக்கும்போது, ஒருநாள் என் அப்பா நான் படிக்கும் பள்ளிக்கு வந்து பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று அழைத்துப் போனார். காரில் ஏறிய நான், பதற்றத்துடன் ‘பாட்டிக்கு என்னாச்சுப்பா?’ என்று கேட்க, ‘பாட்டிக்கு ஒண்ணுமில்லை. நாம படத்துக்குப் போறோம்!’ என்று காரை தியேட்டருக்கு விரட்டினார். சினிமாவின் மேல் என் அப்பா அம்மாவுக்கு இருந்த காதல்தான் எனக்குள்ளும் மையம்கொண்டது. அதுதான் தற்போது என்னை இங்கே நிறுத்தியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு என் நன்றிகள்!” என்று கூற, அரங்கம் முழுவதும் கரவொலி!

தெரியுமா?

உலகில் வேகமாகப் பேசக்கூடிய மொழி பிரெஞ்சு மொழியாகும்.