பிரீமியம் ஸ்டோரி

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... நம்ம தலைக்கு கிரீடமாக இருக்கும் தலைமுடியைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறார், சருமநோய் நிபுணர், ரேணுகா ராமகிருஷ்ணன்

*
மனிதர்களின் தலையில் சராசரியா ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் வரைக்கும் இருக்கும்.


*
நல்ல ஆரோக்கியமா இருக்கும் ஒரு தலைமுடி, சுமார் 100 கிராம் எடையைத் தாங்கும். ஒரு மனிதனின் மொத்த தலைமுடியும் சேர்ந்தா, 12 டன் எடையைத் தாங்கும்.  அதாவது, இரண்டு ஆப்பிரிக்க யானைக்குச்  சமம்.

12 டன் பலசாலி

ஒரு மாசத்துக்கு சுமார் 1.25 செ.மீ அளவுக்கு வளரும்.  ஒரு வருஷத்துக்கு 15 செ.மீ வளரும். என்னதான் மூலிகைத் தைலம், ஷாம்புன்னு தேய்ச்சாலும் அதுக்குமேல வளராது.

* ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி வரை இயற்கையாவே உதிரும். அதனால், தலை சீவும்போது சீப்புல முடி வந்துச்சுன்னா கவலைப்படாதீங்க.

* ஒரு முடி உதிர்ந்தால்,  மயிர்க்கால்களிலிருந்து  அடுத்த முடி வளரத் தொடங்கிடும். இது இயற்கை. இயல்பா தலைமுடி வளரும் விகிதத்தைவிட கொட்டும் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் வழுக்கைப் பிரச்னை ஏற்படும்.

* நம்ம தலைமுடி ‘கெரட்டின்' (Keratin) புரதத் திசுவால் ஆனது.  இது நம் உடலில் வேகமா வளரக்கூடிய ரெண்டாவது திசு. இதைவிட எலும்பு மஜ்ஜை திசு வேகமா வளரும்.

12 டன் பலசாலி

* தலையில் உள்ள அடித்தோல்  (Dermis) பகுதியிலிருந்துதான் தலைமுடி வளரும்.  தாவரத்துக்கு வேர் மாதிரியே தலைமுடிக்கும் வேர் இருக்கு. அதை 'மயிர்க்கால்' (Hair follicle) என்பார்கள். இதைச் சுற்றி குமிழ் (Hair bulb) மாதிரி அமைப்பு இருக்கும். ஒவ்வொரு முடிக்கும் ஒரு மயிர்க்கால், அதைச் சுற்றி குமிழ் அமைப்பு இருக்கும். மொட்டை அடிச்சதுக்கு அப்புறமும் தலைமுடி வளர்றதுக்குக் காரணம் இதுதான்.

* மயிர்க்கால் மற்றும் குமிழ் அமைப்புக்கு எந்த அளவு ரத்த ஓட்டம், வைட்டமின்கள், பையோடீன், ஊட்டச்சத்துகள் கிடைக்குதோ, அந்த அளவு முடி வளர்ச்சி அதிகமா இருக்கும்.
 
* நம்ம தலைமுடி மூணு நிலைகளில் வளருது. முடி உருவாக்கம் (Anagen), முடிச் சிதைவு (Catagen), சுருண்டு வளர்ச்சியில்லாத முடி (Telogen). மயிர்க்காலில் தலைமுடி உருவாகி வளர்ந்து வெளியே வந்ததும், அடிப்பகுதி சிதைஞ்சு போயிரும். இந்த முடி தினமும் உதிர்ந்து கொட்டிக்கிட்டே இருக்கும்.

12 டன் பலசாலி

* தலைக்கு எண்ணெய் வைக்காதது, அதீத மன அழுத்தம்னு பல காரணங்களால் தலைமுடி வேகமா கொட்டுது. இதனால், 25 வயசிலயே வழுக்கை ஆரம்பிக்குது. எண்ணெய் தேய்த்தால்தான் மயிர்க் கால்களுக்கு அதிகமா ரத்தம் பாயும். உங்களுக்குத் தலைமுடி நீளமா, அடர்த்தியா வேணும்னா மறக்காம தலையில் எண்ணெய் தடவுங்க.

* மூணு நிற காய்கறிகளைச் சாப்பிடுங்க.கேரட், பீன்ஸ், பீட்ரூட். எந்தச் சூழலிலும் காலை உணவைத் தவிர்க்காதீங்க.

* ஒரு சென்டிமீட்டர் நீளத்துக்கு வளர்ந்த ஒரு முடியைப் பார்த்தே ஒரு மாசத்துல என்னென்ன சாப்பிட்டோம், என்னென்ன குடிச்சோம்னு கண்டுபிடிச்சுடலாம்.

* மரபியல் ரீதியாவும் சிலருக்குச் சின்ன வயசுலயே வழுக்கை விழலாம். இதை எப்பிடி சரிசெய்ய ஆராய்ச்சி நடக்குது.

12 டன் பலசாலி

* முடி கறுப்பா இருக்கக் காரணம், நம் தோலில் இருக்கும் மெலனின் நிறமி. மெலனின் நிறமி குறைய குறைய தலைமுடி வெள்ளையாவோ, செம்பட்டை நிறத்துக்கோ மாறும்.

* வெள்ளை முடியைப் பிடிங்கினால் நரைமுடி இன்னும் அதிகமாகும் என்பதெல்லாம் சும்மா பூச்சாண்டி.

- சி.வெற்றிவேல்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு