Published:Updated:

சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!
சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!

சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!

பிரீமியம் ஸ்டோரி

குட்டீஸை, எதிர்கால ரோபோடிக் துறைக்கு வரவேற்கவும் ஊக்கப்படுத்தவும், ‘எஸ்பி ரோபோடிக்ஸ் மேக்கர் லேப்’ குழு,  மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், ரோபோட் கண்காட்சி மற்றும் போட்டிகளை நடத்தியது.

நூற்றுக்கணக்கான சுட்டிகள், தங்களது குட்டிக் குட்டி ரோபோக்களுடன் பங்கேற்று அசத்தினர்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை எனப் பல நகரங்களில் நடத்தப்படும்  இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள், இறுதிப் போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டு, சிங்கப்பூரில் நடக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ, கால்பந்து விளையாடும் ரோபோ, விபத்தின்றி சாலையில் செல்லும் தானியங்கி ரோபோ, விவசாயத்துக்குப் பயன்படும் ரோபோ என ஒவ்வொன்றும் அசரவைத்தது.

சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!

கண்காட்சியைத் தொடங்கிவைத்த பள்ளி கல்வி இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், “ரோபோடிக் துறையில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. எல்லாத் துறைக்குமே ரோபோடிக்ஸ் தேவைப்படுகிறது. மாணவர்கள் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  எல்லாரையும் உலகம் நினைவு வைப்பதில்லை. சாதனை செய்கிறவர்களை மட்டுமே நினைவில் வைக்கும். என்னால் முடியும் என்று உழைத்து, வரலாற்றில் இடம்பிடியுங்கள்” என்றார்.

எஸ்பி ரோபோடிக்ஸ் மேக்கர் லேப் இணை நிறுவனரான சினேகா ப்ரியா, “ரோபோடிக்ஸ் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தவுள்ளோம்” என்றார்.

போட்டிகளில் பங்கேற்ற சுட்டிகள், “செல்ஃப் ட்ரைவ் ரோபோவுக்கு டிரைவர் தேவையில்லை. தானாகவே செயல்படும். எதிர்காலத்தில் ஓட்டுநர் இல்லாத வண்டிகள்தாம் சாலையில் ஓடும்.

இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டது சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ். ஜெயிக்கிறோமோ இல்லையோ, ஒவ்வொரு போட்டியும் நம்மை முன்னேற்றிக்கொள்ள, கற்றுக்கொள்ள கிடைக்கும் வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கிறோம்’’ என்றார்கள்.

அசத்துங்க சுட்டி விஞ்ஞானிகளே!

- ச.ராம் சங்கர்,  படம்: ஆ.வள்ளி சௌத்திரி
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு