Published:Updated:

IIT-Madras: மனித மூளை குறித்தான அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், சென்னை ஐஐடி-யில் திறப்பு!

IIT-Madras

இங்கு நடத்தப்படக்கூடிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் செயல்படக்கூடிய சிறந்த ஆய்வகங்களால் கண்காணிக்கப்பட இருக்கிறது.

IIT-Madras: மனித மூளை குறித்தான அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், சென்னை ஐஐடி-யில் திறப்பு!

இங்கு நடத்தப்படக்கூடிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் செயல்படக்கூடிய சிறந்த ஆய்வகங்களால் கண்காணிக்கப்பட இருக்கிறது.

Published:Updated:
IIT-Madras

மனித மூளை குறைத்தான ஆராய்ச்சிகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல மூளை செல்களை உயர் ‘Resolution’-யில் நோக்கக்கூடிய அதிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது.

'சுதா கோபாலகிருஷ்ணன் பிரைன் சென்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மையத்தின் மூலம் மூளை செல்களின் வரைபடங்களையும் அதன் இணைப்புகள் பற்றியும் பன்மடங்கு நுண்ணியமாக ஆராய்ந்து தகவல்கள் பெற முடியும்.

Sudha Gopalakrishnan Brain Centre
Sudha Gopalakrishnan Brain Centre

இந்நிலையத்தின் முதல் ஆராய்ச்சியாக ‘Computational and Experimental platform for High resolution Terapixel Imaging of ex-vivo Human Brains’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர்களுள் ஒருவரான பேராசிரியர். விஜயராகவன் மேற்பார்வையிடுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு நடத்தப்படக்கூடிய ஆராய்ச்சிகள் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் செயல்படக்கூடிய சிறந்த ஆய்வகங்களால் கண்காணிக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ள ஆய்வகம் உலகின் முக்கிய ‘Neuroanatomy research’ சென்டர்களில் ஒன்றாக உயரக்கூடும்.

Sudha Gopalakrishnan Brain Centre
Sudha Gopalakrishnan Brain Centre

இதுகுறித்து இம்மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸின் மின்னணு பொறியியல் துறை தலைவரான பேராசிரியர். மோகனசங்கர் சிவப்பிரகாசம், "இந்தத் தொழில்நுட்பம் அறிவியல் உடனான மருத்துவத் துறையின் பிடிப்பை அதிக அளவில் ஏற்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நியூயார்க்கில் அமைந்துள்ள ‘கோல்ட் ஸ்ப்ரிங் ஹார்பர் ஆராய்ச்சி நிலையத்தின்’ விஞ்ஞானியான பார்தா மித்ரா, ஐஐடி மெட்ராஸின் இயக்குனரான பேராசிரியர் காமகோடி மற்றும் வேலூர் சி.எம்.ஸி கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ஜியார்ஜ் வர்கீஸ் ஆகியோர் இந்நிகழ்வின் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism