Published:Updated:

நோபல் பரிசு 2020: "நோய் நொடியின்றி வாழ மரபணுக்களை திருத்தி எழுதும் ஆய்வு!"

நோபல் பரிசு - வேதியியல்
நோபல் பரிசு - வேதியியல் ( https://www.nobelprize.org/ )

மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட 'இம்மானுவேல் சார்பென்டிர்' மற்றும் 'ஜெனிஃபர் ஏ. டூட்னா' இருவருக்கும் இந்த ஆண்டு விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளில் தலைசிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன. இன்று வேதியியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட 'இம்மானுவேல் சார்பென்டிர்' மற்றும் 'ஜெனிஃபர் ஏ. டூட்னா' இருவருக்கும் இந்த ஆண்டு விருது பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

Emmanuelle Charpentier and Jennifer A. Doudna
Emmanuelle Charpentier and Jennifer A. Doudna
https://www.nobelprize.org/

மரபணு மாற்றம் மேற்கொள்ள உதவும் வழிமுறைகளில், மிகவும் துல்லியமாக பிரச்னைக்குரிய மரபணுத் தகவல்களை துண்டிக்க உதவும் CRISPR/Cas9 மரபணுத் துண்டிப்பான்களை உருவாக்கியதற்காக இவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் ஆய்வின் உதவியின் துணையுடன் மரபணுக்களில் திருத்தம் செய்வது விரைவாக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு: ஹெப்படைட்டிஸ் சி வைரஸைக் கண்டறிந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு கௌரவம்!

ஃபிரான்ஸ் நாட்டில் பிறந்த இம்மானுவேல் சார்பென்டிர் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 'tracrRNA' என்ற பாக்டீரியாக்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியமான ஒரு மூலக்கூறைக் கண்டறிந்தார், இவ்வாய்வு முடிவை வெளியிட்ட 2011-ம் ஆண்டு அமெரிக்கரான உயிரியல் ஆராய்ச்சியாளரும் RNA மூலக்கூறு ஆய்வில் திறன் வாய்ந்த ஜெனிஃபர் ஏ. டூட்னா உடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் பாக்டீரியாக்களின் மரபணுத் துண்டிப்பான்களை சோதனைச்சாலையில் செயற்கையான முறையில் உருவாக்கினார்கள். இந்த CRISPR/Cas9 மரபணுத் துண்டிப்பான் எளிமையானதாகவும் துல்லியமானதாகவும் அமைந்தது.

CRISPR/Cas9 மரபணுத் துண்டிப்பான்
CRISPR/Cas9 மரபணுத் துண்டிப்பான்
நோபல் பரிசு 2020: பால்வீதி மண்டலத்தின் இருண்டப் பக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஆய்வுகள்!

இந்த ஆய்வை அடியொற்றி உலகம் முழுக்க உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் தாவரங்கள், உயிரிணங்களின் மரபனு மாற்றத்துக்கான ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்கள். அடிப்படை அறிவியல் மட்டுமல்லாமல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பிரிவுகளிலும் இவர்களுடைய ஆய்வு மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான மருத்துவச் சிகிச்சை முறைகளை மேற்கொள்வதிலும், மரபு ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை களைய உதவும் சிகிச்சை முறைகளுக்கும் இவர்களுடைய ஆய்வு அடிகோலி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு