Published:Updated:

அடடே ஐடி விங்!

ஐடி விங்
News
ஐடி விங்

அண்ணனின் பேச்சுகளை சிறு சிறு வீடியோவாக கட் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர், ஷேர்சாட் போன்ற சமூக வலைதளங்களில் எங்கள் தன்னார்வலர்கள் பரப்பிவருகிறார்கள்

ஒருகாலத்தில் மாணவரணி, இளைஞரணி, மகளிரணி என நிர்வாகிகள், தொண்டர்களின் பலத்தை மட்டுமே நம்பியிருந்த கட்சிகளுக்கு இன்று தகவல் தொழில்நுட்ப அணி தவிர்க்க முடியாத அணியாகிவிட்டது. நிமிடத்துக்கு நிமிடம் டிரெண்ட் மாறும் சமூக வலைதள உலகில் ஒவ்வொரு கட்சியுமே தங்களை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள எவ்வளவு கோடிகளையும் கொட்டிக் கொடுக்கத் தயாராகிவிட்டன. டீக்கடைகளிலும் தெருமுனைக் கூட்டங்களிலும் கட்சியை வளர்த்த நிலை மாறி, இன்று பளபளக்கும் கார்ப்பரேட் அறைகளில் கம்ப்யூட்டர்களில் கட்சியை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள்?

அடடே ஐடி விங்!

சுனந்தா தாமரைச்செல்வன், தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர், நாம் தமிழர்

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே எங்கள் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் எங்களுக்கு ஆதரவாக எழுதிவந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தோம்.

நாடாளுமன்றத் தேர்தலில், அது எங்களுக்கு மிகப்பெரிய அளவுக்குக் கைகொடுத்தது. ட்விட்டரில் ஒரு விஷயத்தை டிரெண்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கன்டென்ட்டைக் கொடுத்துவிட்டால் போதும், எங்கள் தன்னார்வலர்கள் பார்த்துக்கொள்வார்கள். மற்றக் கட்சிகளைப்போல சில ஆயிரம் ட்வீட்களுக்காகப் பல லட்சம் செலவழிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் ட்விட்டர் கணக்குகளை உருவாக்கிவிட்டோம். வேட்பாளர்களின் தனித்திறமைகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறோம். அண்ணன் சீமானின் பேச்சுகளை லைவ் டெலிகாஸ்ட் செய்ய எட்டுப் பேர்கொண்ட குழு எப்போதும் அண்ணனுடனேயே இருப்பார்கள். அண்ணனின் பேச்சுகளை சிறு சிறு வீடியோவாக கட் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர், ஷேர்சாட் போன்ற சமூக வலைதளங்களில் எங்கள் தன்னார்வலர்கள் பரப்பிவருகிறார்கள். அவர்கள் யாருக்கும் ஊதியம் கிடையாது."

அடடே ஐடி விங்!

’கிருபாகரன், மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, மக்கள் நீதி மய்யம்

“கொரோனா பரவல் காரணமாக, பெரும்பாலும் இணையவழியாகத்தான் செயல்படுகிறோம். தவிர்க்க முடியாத சூழலில் களத்துக்குச் சென்று, தகவல்கள் சேகரித்து வீடியோக்களாக ஒளிபரப்பி வருகிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவிர பொதுமக்களுக்காகவும் வாட்ஸ்அப் குரூப்களை வைத்திருக்கிறோம். அதன் மூலமாக எங்கள் கருத்துகளை, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை எடுத்துச் செல்கிறோம். எங்கள் தலைவர் பேசும் முக்கியமான விஷயங்களையும், வேட் பாளர்களின் பிரசாரங் களையும் அதில் லைவ்வாக ஒளிபரப்பிவருகிறோம்.”

அடடே ஐடி விங்!

ஆஸ்பயர் சுவாமிநாதன், இணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, அ.தி.மு.க

“நாட்டிலேயே முதன்முதலில் தகவல் தொழில்நுட்பத்துக்காக ஓர் அணியை உருவாக்கியது அ.தி.மு.க-தான். எங்கள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியில் மட்டுமே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். எங்களுக்கு 80,000 வாட்ஸ்அப் குரூப்கள் இருக்கின்றன. அவற்றில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், தொழில்முனைவோர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வாட்ஸ்அப் குரூப்கள் இயங்கிவருகின்றன. அதன் மூலம், கட்சிப் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் 88 லட்சம் புதிய வாக்காளர்களிடம் எங்கள் பிரசாரம் சென்று சேர்ந்திருக்கிறது.’’

அடடே ஐடி விங்!

பழனிவேல் தியாகராஜன், மாநிலச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப அணி, தி.மு.க

“பொதுக்குழுவில் ஆரம் பித்து தலைவரின் கூட்டங்கள், முப்பெரும் விழா என அனைத்துச் செயல்பாடு களையும் டிஜிட்டல் வழியில் நிகழ்த்திக் காட்டிய முதல் அரசியல் கட்சி தி.மு.க-தான். அணி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களில் குக்கி ராமங்கள் வரை நிர்வாகிகளைத் தேர்ந் தெடுத்து, பயிற்சி கொடுத்து வைத்திருந்தோம். கடந்த நாடாளுமன்றத் தேர் தலில் அதுதான் எங்களுக்குக் கைகொடுத்தது. தொகுதி வாரியாக எந்த பூத்தில் கட்சி பலமாக இருக்கிறது, எந்த பூத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதும் எங்கள் அணிக்குத் துல்லியமாகத் தெரிந்துவிடும். வாக்கு சதவிகிதத்தை அதி கரிப்பது, அதை எங்களுக்குச் சாதகமாக மாற்றுவது எனப் பல வியூகங்களை வகுக்கிறோம். அதனால், சிறப்பான தேர்தல் முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.’’