Published:Updated:

Antarctica: உறைபனிக்குக் கீழே ஒரு உலகம்; விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!

அன்டார்ட்டிகா
News
அன்டார்ட்டிகா

உறைபனிக்கு கீழே நன்னீர் ஏரிகள் இருப்பதை முன்பே ஆய்வாளர்கள் எழுதியிருந்தாலும் அங்கே இப்படியான வாழ்நிலை இருப்பதை ஆய்வு செய்தது மிகக்குறைவு.

Published:Updated:

Antarctica: உறைபனிக்குக் கீழே ஒரு உலகம்; விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!

உறைபனிக்கு கீழே நன்னீர் ஏரிகள் இருப்பதை முன்பே ஆய்வாளர்கள் எழுதியிருந்தாலும் அங்கே இப்படியான வாழ்நிலை இருப்பதை ஆய்வு செய்தது மிகக்குறைவு.

அன்டார்ட்டிகா
News
அன்டார்ட்டிகா

உலகில் மனிதர்களின் தடம் பதியாத இடங்களும் அறிய முடியாத வாழ்வும் இருப்பதை இதுபோன்ற கண்டுபிடிப்புகள்தாம் நமக்கு உணர்த்துகின்றன. அன்டார்டிகாவின் உறைப்பனி பாளங்களுக்குக் கீழே இதுவரை அறியாத வாழ்க்கை சூழல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஆய்வு குழுவினர் `காலநிலை மாற்றத்தால் உருகும் பனியில் நதித்துவாரங்களின் பங்கு' என்ற தலைப்பில் ஆய்வு செய்வதற்காக அன்டர்டிக்காவுக்கு சென்றிருந்தனர். இதில் வெலிங்டன், ஆக்லாந்து, ஒடாகோ பல்கலைகழகங்கள், தேசிய ஆய்வு நிறுவனங்கள் பங்கு கொண்டன.

காலநிலை மாற்றம் குறித்து அறிய சென்றவர்கள், உறைபனிக்கு கீழே 500 மீட்டர் துளையிட்டு ஆய்வு செய்த போது அங்கு உயிரினங்களின் வாழ்விடம் அமைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

Antarctica: உறைபனிக்குக் கீழே ஒரு உலகம்; விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு!

"ஆரம்பத்தில் கேமராவில் ஏதோ கோளாறு என்று நினைத்தோம். பிறகு கூர்மையாக நோக்கும் போது தான் 5 மி.மி அளவில் கணுக்காலிகள் போலான உயிரிகள் அலைவதைப் பார்க்க முடிந்தது" என்கிறார் ஆய்வாளர்களால் ஒருவரான கிரேக் ஸ்டீவன்ஸ்.

லாப்ஸ்ட்டர்ஸ், நண்டுகள், பூச்சிகள், கணுக்காலிகள் போன்ற உயிரினங்கள் 500 மீட்டர் உறைபனிக்கு கீழே நீரில் வாழ்ந்து வருவதைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சியடைகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

உறைபனிக்குக் கீழே நன்னீர் ஏரிகள் இருப்பதை முன்பே ஆய்வாளர்கள் எழுதியிருந்தாலும் நேரடியாக ஆய்வு செய்தது மிகக்குறைவு.

"முதன்முறையாக இந்த நதியைப் பார்த்ததும், உணர்ந்ததும் புதிய ரகசிய உலகத்தில் நுழைந்தது போல இருக்கிறது" என்கிறார் ஆய்வாளர் ஹூ ஹோர்கன், முதன்முறையாக நதித்துவாரம் இருக்கும் இடத்தை சாட்டிலைட் மேப்பில் கண்டறிந்தவர். அங்கு வாழும் உயிரிகள், அந்த நீரின் தன்மை குறித்து மேலும் ஆய்வு செய்வதற்கு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் பனியிலும் வெளிச்சம் இல்லாத சூழலிலும் வாழ்வது குறித்து ஆய்வுகள் செய்யப்படவுள்ளன. நாம் அறியாத உலகின் ஒரு சிறு வழி கிடைத்திருக்கிறது.