Published:Updated:

இந்திய மண்ணின் இதயங்களான விஞ்ஞானிகள்! #MyVikatan

Indian Science - jantar Mantar
News
Indian Science - jantar Mantar

தற்போதுள்ளது போல் எந்த நவீன எந்திரங்களும் இல்லாத அந்தக் காலத்தில், இவர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் வியப்புக்குரியவை. எப்படி எப்படி என்று எத்தனை முறை கேட்டாலும் விடை கிடைத்தபாடில்லை.

வாழ்வின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்திலும் நம் முன்னோர் கோலோச்சி வாழ்ந்தார்கள் என்பதில்தான் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை.

புத்தரையும் காந்தியையும் உலகுக்கு வழங்கிய புனித மண் நம் இந்திய மண். விவேகானந்தரும்,பாரதியும் வீறு கொண்டு எழுந்தது இந்த மண்ணில்தான்.பூஜ்யத்திலிருந்தே எண்கள் தொடக்கம் என்ற அடிப்படையைக் கண்டுபிடித்து உலகை அசத்தியதும் நம் முன்னோர்தாம். ஆன்மிகம், விஞ்ஞானம், பண்பாடு, நாகரிகம் என்று பலதுறைகளிலும் பாரதம் தழைத்தோங்கிக் கிடந்த அந்தக் காலத்தை என்னென்பது! இமயம் தொடங்கிக் குமரி வரை ஏகமாக விரிந்த இந்திய மண் எவ்வளவு உயர்ந்தது? வாழ்வின் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்திலும் நம் முன்னோர் கோலோச்சி வாழ்ந்தார்கள் என்பதில்தான் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை. எப்படி இதையெல்லாம் சாதித்தார்கள் என்ற வியப்பு வினாவுக்கு விடை கிடைப்பது அரிதே. அடிமை வாழ்வுக்கு முந்திய பாரதமும் அகிலத்தில் உயர்ந்தே நின்றிருக்கிறது. பாரதத்தின் பண்டைய விஞ்ஞானிகள் பார் முழுவதற்கும் வழிகாட்டும் பல அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நமது நாட்டைத் தலை நிமிரச் செய்துள்ளனர்.

‘ஆர்ய பட்டர்’ பூமியின் விட்டத்தை 99.8 விழுக்காடு சரியாகக் கண்டுபிடித்த, கணித மற்றும் வானியல் வல்லுனர். பூஜ்யத்தைப் பயன்படுத்தியே கணிதக் கணக்குகள் என்று உலகம் அறியச் செய்தவர். சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமி தன்னைத் தானே சுற்றுதல், சூரிய ஒளியை நிலவு பிரதிபலித்தல் போன்றவற்றைத் துல்லியமாகக் கண்டுணர்த்திய கனவான். தனது 23 வது வயதிலேயே ‘ஆரிய பட்டியா’ என்ற நூலையும் பின்னர் ‘ஆரியச் சித்தாந்தா’ என்ற நூலையும் எழுதி உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர்.பை(π) யின் மதிப்பை, தற்போதுள்ள மதிப்புக்கு மிக நெருக்கமாகக் கண்டுபிடித்த முதல்வர்.

உலகில் முதன்முதலாக அறுவை சிகிச்சையைச் செய்து அசத்திய சிறப்புக்குரியவர் சுஸ்ருதர். கண்புரை அறுவைச் சிகிச்சை,பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை என்று அழைக்கப்படும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை ஆகியவை குறித்த விரிவான விளக்கத்தைத் தனது நூலான ‘சுஸ்ருத சம்ஹிதை’ யில் விலாவாரியாக விவரித்தவர் இவர். நமது துரதிர்ஷ்டம் அந்த மூல நூல் கிடைக்கவில்லை. ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட அந்த நூல், கி.பி.,எட்டாம் நூற்றாண்டிலேயே அரபி மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதே கூடுதல் சிறப்பு.

Sushruta
Sushruta

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களைத் தடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளதுடன், நோய்களை வருமுன் தடுப்பதே சிறந்தது என்றும் கூறியுள்ளார் .

மத்திய பிரதேச உஜ்ஜைனியைச் சேர்ந்த வராஹமிஹிரர் ‘பிரஹத் சம்ஹிதை’ என்ற கலைக் களஞ்சியம் போன்ற விரிவான நூலின் மூலம் உலகத்தால் அறியப்பட்டவர். இரவும் பகலும் சமமாக உள்ள நாட்களில் இடைப்பட்ட வித்தியாசம் 50.32 வினாடிகள் என்று கணித்து உலகுக்கு அறிவித்தவர்.

கணித மற்றும் வானியல் அறிஞரான பிரம்மகுப்தர் ராஜஸ்தானின் மின்மால் பகுதியைச் சேர்ந்தவர். கணிதச் சூத்திரங்களை அறிமுகப்படுத்திய இவர், ’பிரம்மாஸ்புத சித்தாந்தா’மற்றும் ‘கண்டகாத்யகா’ போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

ஆயுர்வேத மருத்துவத்தின் இரண்டு அடிப்படை நூல்களுள் ஒன்றான ‘சரஹ சம்ஹிதை’யை எழுதியவர் சரகர். சுமார் 2000 க்கும் மேற்பட்ட மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைத் தெளிவாகக் கூறுகிறது இவரது நூல். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இவர், வாழ்க்கை முறை, மனித முயற்சிகள் மூலம் நோய்களைத் தடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளதுடன், நோய்களை வருமுன் தடுப்பதே சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
‘பசியையும் பட்டினிச்சாவையும் எவ்வாறு எதிர்கொள்வது’ என்று ஏங்கிக் கிடந்த அந்தக் காலத்திலேயே ஆய்வுகள் செய்து, அகிலம் புகழும் கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு வழங்குவது என்பது சாதாரணமன்று.

தற்போதுள்ளது போல் எந்த நவீன எந்திரங்களும் இல்லாத அந்தக் காலத்தில், இவர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகள் வியப்புக்குரியவை.எப்படி எப்படி என்று எத்தனை முறை கேட்டாலும் விடை கிடைத்தபாடில்லை. அக்காலத்தில் கணிதம், வானியல், மருத்துவம் ஆகியவையே பிரதான இடங்களைப் பெற்றிருந்தன. அவற்றில் நம் முன்னோர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் பூவுலகம் உள்ளவரை புகழ் சேர்ப்பவை. ‘பசியையும் பட்டினிச்சாவையும் எவ்வாறு எதிர்கொள்வது’ என்று ஏங்கிக் கிடந்த அந்தக் காலத்திலேயே ஆய்வுகள் செய்து, அகிலம் புகழும் கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு வழங்குவது என்பது சாதாரணமன்று. அசாதாரணமான அந்த இக்கட்டான சூழலிலும் உயரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து உன்னத இடத்தைப் பிடித்த உத்தமர்களைப் பாராட்ட வார்த்தைகளேது?

இன்றைக்குத் தொண்ணூறு ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 1930 லேயே இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்று வந்தவர் நம் சர்.சி.வி.ராமன்.நமது திருச்சி மண்ணில் பிறந்த இவர், நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் மட்டுமல்ல, ஆங்கிலேயரல்லாத முதல் விஞ்ஞானியுங்கூட. இவரால் கண்டறியப்பட்ட ஒளி விலகல் விளைவு, இவருடைய பெயரிலேயே ‘ராமன் விளைவு’ என்றழைக்கப்படுவதிலிருந்தே இவரின் பெரும் பெருமை புலனாகும். இசைக் கருவிகளின் ஒலியியல் பற்றி ஆராய முற்பட்ட இவர், நமது மத்தள வகை இசைக் கருவிகளான தபலா மற்றும் மிருதங்கங்களின் இசை இயல்பை ஆராய்ச்சிக்கு உற்படுத்தினார். ’இசையே வாழ்வின் இனிய தருணங்களைத் தோற்றுவிக்கிறது!’ என்ற கூற்றுக்கு மெருகிட்டவர் இவர்.

C V Raman
C V Raman
இந்திய அணு சக்தியின் தந்தை’என்று போற்றப்படும் ஹோமி ஜே பாபா, இந்தியா அணுகுண்டு தயாரிப்பதை ஆதரிக்கவில்லை.

ஹோமி ஜே பாபா, பம்பாயில் பிறந்து குவாண்டம் கொள்கையில் (Quantum Principle) பிரதான பங்கேற்றவர். ’இந்திய அணு சக்தியின் தந்தை’என்று போற்றப்படும் இவர், இந்தியா அணுகுண்டு தயாரிப்பதை ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக அணுஉலை தயாரித்து நம் நாட்டின் ஏழ்மையையும் வறுமையையும் போக்க வேண்டுமென்ற மாறாத கருத்து கொண்டிருந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா, தானியங்கிக் குழாய் அடைப்புகள், தொகுதி பாசன அமைப்பு போன்ற பொறியியல் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய பொறியாளர். மைசூரின் திவானாகவும் பணியாற்றிய இவர் பாரத ரத்னா விருதையும் வென்றவர். இந்திய நாடு தொழிற்சாலைகள் மூலமே வளர்ச்சியை எட்ட முடியும் என்பதே இவரின் கொள்கை. இவர் பிறந்த நாளான செப்டம்பர் 15, பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுவதே இவரின் பெருமைக்குச் சான்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாகூரில் பிறந்து,சென்னையில் பயின்று,அமெரிக்காவில் குடியேறிய எஸ்.சந்திரசேகர், கணித கோட்பாட்டிற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983ல் பெற்றவர். நட்சத்திரங்களின் ஆற்றலில் உள்ள கதிரியக்கம் பற்றிய இவரது ஆய்வு பெரிதும் பாராட்டப்பட்ட ஒன்றாகும்.

சீனிவாச ராமானுஜன் தமிழகத்தைச் சேர்ந்தவர். கணித மேதையான இவரின் எண் கோட்பாடு, முடிவில்லா தொடர் போன்றவை என்றைக்கும் இவர் பெயர் சொல்பவை. இவர் பிறந்த தினமான டிசம்பர் 22 மாநில தகவல் தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Srinivasa Ramanujan
Srinivasa Ramanujan

குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரில் தோன்றிய விக்ரம் சாராபாய், ’இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை’ என்றழைக்கப்படும் சிறப்புக்குரியவர். ’இஸ்ரோ’ உருவாக காரணகர்த்தாவாக விளங்கியவர். நாட்டின் விண்வெளி திட்டங்கள் சிறப்புறப் பெரிதும் உதவிய இவருக்கு, இந்திய அரசு, ‘பத்மபூஷண்’, ‘பத்ம விபூஷண்’ பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது.

பெங்களூருவில் பிறந்த கணிதமேதை சகுந்தலாதேவி,ஜோதிடக் கலையிலும் ‘கின்னஸ்’ ரெகார்டு படைத்தவர். கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்றவற்றையும்விட விரைவாகக் கணக்குப் போடுவதில் வல்லவர். சர்க்கஸில் வேலை பார்த்த தந்தையுடன் 3 வயதிலேயே சீட்டு வித்தைகளைச் செய்து அனைவரையும் அசத்தியவர். 6 வயதில் மைசூர் பல்கலைக் கழகத்திலும், 8 வயதில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறனை வெளிப்படுத்தி, பொறியாளர்களையே புளகாங்கிதம் அடைய வைத்தவர்.

ஆராய்ச்சிக்கென்று நிதி ஒதுக்கி, ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து ஆதரவு அளித்தால் அவர்கள் நிச்சயமாக உலகம் மெச்சும் சாதனைகளைப் புரிவார்கள்.

இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ வில் விண்வெளி பொறியாளராகப் பணியாற்றிய ஏபிஜெ அப்துல் கலாம், நாட்டின் 11 வது குடியரசுத் தலைவராகவும் பணிபுரிந்த சிறப்புக்குரியவர். இந்தியாவை வல்லரசாக்கவும், இந்திய மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் தன் இறுதி மூச்சு வரை,எந்த எதிர்பார்ப்புமின்றி உழைத்த உத்தமர் இவர்.

இந்த மண்ணில் உதித்த இன்னும் எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனர். அத்தனை பேரின் ஆற்றலைப் பட்டியலிட்டால், வெகுவாக நீளும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். வேறொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம்.

A. P. J. Abdul Kalam
A. P. J. Abdul Kalam

இப்பொழுதும் நம் இளைஞர்கள் தங்களுக்கு மற்றும் சமுதாயத்திற்குப் பயன்படும் கருவிகளைக் கண்டு பிடித்த வண்ணந்தான் உள்ளனர். அந்த வகையில்,சமீபத்தில் தம்பி ஒருவர் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிளைத் தானே வடிவமைத்து ஓட்டி வருவதாகவும்,நமது சாதாரண சைக்கிளில் சில கருவிகளைப் பொறுத்திப் பயன்படுத்தி வருவதாகவும் வந்த செய்திகள் மனதுக்கு இதமளித்தன. அவரிடம் மேலும் பலர் தங்களுக்கும் அவ்வாறான சைக்கிள்கள் வேண்டுமென்று கேட்டுள்ளதாகவும் அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் வந்த செய்திகள் திருப்தி அளிக்கின்றன.

மத்திய, மாநில அரசுகளும், பெரு நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும்,படிப்பிற்கு உதவும் ‘அகரம்’ போன்ற அமைப்புகளும்,இளம் விஞ்ஞானிகளை ஆதரிக்க முன் வர வேண்டும். அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். ஆராய்ச்சிக்கென்று நிதி ஒதுக்கி, ஆர்வமுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து ஆதரவு அளித்தால் அவர்கள் நிச்சயமாக உலகம் மெச்சும் சாதனைகளைப் புரிவார்கள்.

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து