Published:Updated:

`ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கி.மீ போகலாம்!' - உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் #Germany

ஜெர்மனியில் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

`ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கி.மீ போகலாம்!' - உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் #Germany
`ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கி.மீ போகலாம்!' - உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் #Germany

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத ஹைட்ரஜன் ரயில்களை இயக்கி ஜெர்மனி சாதனை படைத்துள்ளது. ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயிலை இயக்க முடியும். கூடுதலாக லிதியம் அயன் பேட்டரிகளும் பொருத்தப்பட்டுள்ளன. பேட்டரியை ரீ- சார்ஜ் செய்தும் ரயிலை இயக்கலாம். கேஸ் நிரப்புவதுபோல இதில் ஹைட்ரஜனை நிரப்பிக்கொள்ள வேண்டும். வடக்கு ஜெர்மனியில் உள்ள பெர்ம்வெர்ட் ரயில் நிலையத்தில் ஹைட்ரஜன் நிரப்பும் பங்கு அமைக்கப்பட்டுள்ளது.

Picture Courtesy : The Guardian

இது கார்பன்டை ஆக்ஸைட் வெளியிடாது. சுமார், 140 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும். 300 பயணிகள் இதில் பயணிக்கலாம். பிரெஞ்சு நிறுவனமான 'அல்ஸ்டாம் ' தயாரிப்பான இதில் ஒலிச்சத்தத்தையும் குறைந்த அளவே எழுப்பும். ரயிலின் செல்லப் பெயர் ஹைட்ராயில். செப்டம்பர் 17-ம் தேதி முதன் முதலாகப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் 14 ஹைட்ரஜன் ரயில்களை வாங்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. ஒரு ரயிலின் தயாரிப்புச் செலவு ரூ.50 கோடி வரை செலவாகிறது. 

இந்த ரயிலினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் விலை அதிகம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, கனடா, பின்லாந்து போன்ற நாடுகளும் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளன. பிரான்ஸில் 2022-ம் ஆண்டு முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.