Published:Updated:

உலக வரலாற்றில் உயர் இடம் கண்ட ஜப்பானின் புதிய ரயில்! #MyVikatan

Dual Mode Vehicle
News
Dual Mode Vehicle ( japanstation )

ஜப்பானியர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு, இரட்டை பயன்பாட்டு வாகனம் (Dual Mode Vehicle). பூமிப் பந்தின் வேறெந்த நாட்டிலும் இதுவரை இது போன்ற வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படவில்லை!

இரண்டாவது உலகப் போரில், எழும்பவே முடியாத அளவுக்கு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் அமெரிக்க அணுகுண்டுகளால் உருக்குலைக்கப்பட்டன.

உலக வரலாற்றைப் புரட்டினால், ஜப்பானின் பங்களிப்பை எளிதில் கடந்து விட முடியாது.ஒரு காலத்தில் காரில் தொடங்கிக் கடைசியாக நம் சட்டை பாக்கெட்டில் செருகிக் கொள்ளும் பேனா வரையிலும் அனைத்திலும் ‘மேட் இன் ஜப்பான்’ என்ற முத்திரையே இருக்கும்.அது மட்டுமல்ல.ஜப்பான் நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதே கௌரவம் என்று கருதிய காலமும் உண்டு.ஜப்பான் தயாரிப்பான பாங்கான ‘பாக்கெட் கால்குலேட்டர்’களை இந்திய இளைஞர்கள் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துக் கொண்டு வலம் வந்த நாட்களை மறக்கவே முடியாது.

உலகமே உறங்கிக் கொண்டிருக்கையில் உதய சூரியனை ரசிக்கும் நாடான ஜப்பான், 3300 தீவுகளால் ஆனது. அமெரிக்காவின் பரப்பளவில் 25ல் ஒரு மடங்கும், இந்திய நிலப்பரப்பில் ஒன்பதில் ஒரு மடங்குமே இந்த நாட்டின் நிலப்பரப்பு.அதிலும் சுமார் 80 விழுக்காடு காடுகளும், மலைகளுமே.18 விழுக்காட்டு நிலத்தில் மட்டுமே வேண்டிய உணவுப் பயிர்களைப் பயிர் செய்கிறார்கள். சுமார் 12.75 கோடி மக்கட்தொகையைக் கொண்டுள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் கண் பதித்தால், வியத்தகு மாற்றங்களை ‘மன்னர் ஆட்சி’ காலத்தில் நாடு ஏற்படுத்தியது புலனாகிறது. கி.பி 1867ல் படையாட்சி முறை ஒழிக்கப்பட்டு அடுத்த ஆண்டே மன்னராட்சி முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது.தனது பழைய உரிமைகளை மீட்டு மேசி மாமன்னர் அரியணை ஏறுகிறார்.1912 வரை நீடித்த மேஜி ஆண்டுமானம் (மேஜி சகாப்தம்), அந்நாட்டு வரலாற்றையே மாற்றியமைத்து விட்டது. பல நாடுகளில் மன்னராட்சி முறை மன்னர்களுக்கு உலைக்களனாக மாறியதுதான் வரலாறு. ஜப்பானிலோ எதிர்மாறாக, அது மகத்தான முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. மேசி மாமன்னரை மக்கள், தெய்வத்தின் திருவுருவாய்ப் போற்றி வணங்கினர். அதன் பயனாக ஜப்பான் ஒரு புது நாடானது. அதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த ஜப்பான் வீறு கொண்டு எழுந்து,1894-95ல் சீனாவையும்,

1904-05ல் ரஷ்யாவையும் போரில் வென்று, வாகை சூடியது.முதல் உலகப் போரைத் தொடர்ந்து அதன் வல்லமையும் பெருமையும் மேலோங்க, அதுவே அதற்குப் பாதகமாக முடிந்தது.

இரண்டாவது உலகப் போரில், எழும்பவே முடியாத அளவுக்கு ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் அமெரிக்க அணுகுண்டுகளால் உருக்குலைக்கப்பட்டன. அந்நாட்டிலிருந்த மூன்றில் ஒரு பங்கு வீடுகளும், பொதுக் கட்டடங்களும், தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும் பிறவும் தரைமட்டமாகின.குண்டு விழுந்த பகுதிகளில் கொழுந்தீ பரவியது.’முடிந்தது இத்தோடு அவர்கள் கதை’ என்று எதிரி நாடுகள் எக்காளமிட, அவர்களோ ‘மீண்டும் வருவோம்’ என்று துளிர்த்து எழுந்தார்கள்.உலக நாடுகள் அனைத்தையும் தங்கள் தயாரிப்புகளால் திணற அடித்தார்கள்.

1970-ம் ஆண்டில் உலகப் பொருட்காட்சி (Expo ‘70) நடத்தி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது ஜப்பான். அதில் உலகின் 77 நாடுகள் பங்கேற்று தங்கள் அரங்குகளை அமைத்தன.’இதுவரை ஆசியாவில் எக்ஸ்போ ‘70 போன்ற பிரமாண்ட பொருட்காட்சி நடந்ததில்லை’ என்று கூறப்படுவதிலிருந்தே அதன் பெருமையையும் சிறப்பையும் உணரலாம்.

நவீன பொருட்கள் தயாரிப்போடு திருப்தி அடையாத ஜப்பான், உலக நாடுகளை ஒன்றிணைக்கும் விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பன்னாட்டு விளையாட்டு அரங்கத்தை (Olympic Sports) 1967-லேயே டோக்கியோவில் அமைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Japan
Japan

உலக நாடுகளிடையே பெரு நட்பு தொடரப் பாலமாக இருப்பது விளையாட்டே. பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட்டிலும், ஹாக்கியிலும் மோதும் போட்டிகள் என்றால் ரசிகர்களின் உற்சாகத்திற்கு எல்லையே இருக்காது.எமக்கோ… பாரதப் போர்தான் மனதில் ஓடும்.பாண்டவர்களும் கௌரவர்களும் பகைமை பாராட்டியதால்தானே பாரதப் போர் நிகழ்ந்து உலகத்திற்குக் கீதாவுபதேசமும் கிடைத்தது. நவீன பொருட்கள் தயாரிப்போடு திருப்தி அடையாத ஜப்பான், உலக நாடுகளை ஒன்றிணைக்கும் விளையாட்டை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பன்னாட்டு விளையாட்டு அரங்கத்தை (Olympic Sports) 1967-லேயே டோக்கியோவில் அமைத்தது.

தூய்மையைக் காப்பதிலும் முன்னோடிகள் அவர்கள். சமீபத்தில் நடைபெற்ற உலக அளவிலான கால்பந்து தகுதிப் போட்டியில் அவர்கள் டீம் தோற்றுப்போன பிறகுங்கூட, விளையாடிய மைதானத்தை முழுமையாகச் சுத்தம் செய்து கொடுத்த பிறகே க்ரவுண்டை விட்டு அந்நாட்டினர் அகன்றார்களாம். என்னே பண்பாடு! எத்தகைய பாரம்பரியம்!

திரு. மணியன் அவர்கள் தனது ‘ஜப்பான் பயணக்கதை’யில் எழுதியிருந்த இரண்டு கருத்துகள், என்றைக்கும் கருவாய் நம் மனத்தில்.அவர் சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் சினிமா ஹூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அதுவோ சந்தடி மிகுந்த சாலை.மக்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள்.அப்படிக் கடந்து போகும் எவரும் நின்று அந்தப் படப் பிடிப்பை வேடிக்கை பார்க்கவில்லை! மணியன் சாருக்கோ ஆச்சரியமான ஆச்சரியமாம். நம்மூரில் குறிப்பிட்ட இடத்தில் படப் பிடிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்தாலே மக்கள் படப்பிடிப்புக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே அந்த இடத்தில் அசெம்பிள் ஆகி, நடிக்க வருவோருக்கு வழி கூட விடமாட்டார்கள்.காவல் துறையினரின் உதவியுடன்தான் அவர்கள் உள்ளேயே வர முடியும்.அலுவலகம், தொழிற்சாலை என்று அத்தனைக்கும் புறப்பட்டவர்கள் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஹூட்டிங் வேடிக்கை பார்க்க இருந்து விடுவர். இது நம்மூர்க் கதை.இதில் பழகிப் போன அவருக்கு, கண்முன்னே ஹூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அதனைப் பொருட்படுத்தாது தங்கள் காரியத்தில் முனைப்பாக இருக்கும் மக்களைப் பார்த்து வினோதம் மேலோங்க, இரண்டொருவரை நிறுத்தி விசாரிக்கிறார். ”என்னங்க... இங்க சினிமா ஷூட்டிங் நடக்குது. இதைப் பார்க்க ஆவலாக இல்லையா?”அவர்கள் அளித்த பதிலில் அவர் திக்கு முக்காடிப் போகிறார். ”நடிப்பு அவர்கள் தொழில்.அதனை அவர்கள் செய்கிறார்கள்.நாங்கள் எங்கள் தொழிலைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறோம்.

விடுமுறை தினங்களில் படத்தைத் தியேட்டரில் பார்த்து ரசிப்போம்” என்றார்கள். அந்தப் பதிலிலேயே அவர்கள் முன்னேற்றத்திற்கான காரணம் புரிகிறது. இது நடந்து பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன.இன்றும் நம்மூர் நிலைமையில் மாற்றமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். எதுவும் விபத்து நடந்து விட்டதோவென்று ஓடிப்போய்ப் பார்த்தால் ‘ஷுட்டிங்’ என்றார்கள். நாம் மனித ஆற்றலை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தக் கற்கவில்லை.

அதே மணியன் சார் ஜப்பானின் வேறொரு பகுதியில் மக்களைச் சந்திக்கிறபோது, அவர்கள் அவரிடம் கேட்டுக்கொண்டது” எங்கள் நாட்டைப் பற்றி நல்ல விதமாக எழுதுங்கள்” என்பதுதானாம். கடமைக்கும் நாட்டுப்பற்றுக்கும் இதைவிட நல்ல உதாரணங்கள் தேவையில்லைதானே. நாம் எப்பொழுது விழித்துக் கொள்ளப் போகிறோம்? அவர்களின் வரலாற்றைத் தெளிவாக நம் இளந்தலைமுறையினர் அறிந்து செயல்பட

வேண்டுமென்பதற்காகவே, பட்டப்படிப்பு மாணவர்களுக்காக 1973-ம் ஆண்டில் நமது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் ‘ஜப்பானின் வரலாறு’ என்ற நூல் வெளியிடப்பட்டது.நிறுவனத்தின் 408வது வெளியீடு அது.பேராசிரியர் கோ.தங்கவேலு அவர்களால் எழுதப்பட்டு, அப்போதைய தமிழகக் கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகம் அவர்களின் அணிந்துரையுடன் வெளி வந்தது.

நம் இளைஞர்களும் சில கண்டுபிடிப்புகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் இது போதாது. உலகத்தில் இளைஞர்களை அதிகமாகக் கொண்ட நம் நாட்டில், உலகத்தையே வியக்க வைக்கும் அளவுக்கான பெரிய கண்டுபிடிப்புகளை நம் இளைஞர்கள் நிகழ்த்த வேண்டுமென்பதே எம்போன்றோரின் பேரவா.

அப்படி என்னதான் இதில் புதுமை என்கிறீர்களா? இது சாலையில் பேரூந்தாகவும் ஓடும்; தண்ட வாளங்களில் ரயிலாகவும் ஓடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்த ஜப்பானியர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு, இரட்டை பயன்பாட்டு வாகனம் (Dual Mode Vehicle).பூமிப் பந்தின் வேறெந்த நாட்டிலும் இதுவரை இது போன்ற வாகனம் கண்டு பிடிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படவில்லை. எனவேதான் இது உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் என்றழைக்கப்படுகிறது. அப்படி என்னதான் இதில் புதுமை என்கிறீர்களா? இது சாலையில் பேரூந்தாகவும் ஓடும்; தண்ட வாளங்களில் ரயிலாகவும் ஓடும். அதற்கு ஏற்ற வகையில் இதனை வடிவமைத்துள்ளார்கள், எப்போதும் எதிலும் புதுமையைப் புகுத்தும் ஜப்பானியர்கள்.

நம்மூர் மினி பஸ் போன்று தோற்றமளிக்கும் இதில் 21 பயணிகள்வரை பயணம் செய்யலாம். சாலையில் பஸ்ஸாக ஓடுகையில் இதன் வேகம் மணிக்கு 100 கி.மீ. ரயிலாகத் தண்டவாளத்தில் ஏறி விட்டால் வேகம் சற்றே குறைந்து மணிக்கு 60 கி.மீ. சாலையில் போக, சாதாரண பஸ்கள் போன்று ரப்பர் டயர்களும், ரயில் பாதையில்

இயங்க எஃகு சக்கரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விபரங்களை ஜப்பானின் ஆசா கோஸ்ட் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,’ஜப்பானின் குறைந்த மக்கள் தொகை கொண்ட ‘கையோ’ போன்ற சிறிய நகரங்களுக்கு இது மிகவும் பயன்படும்.ரயிலாகவும் பஸ்ஸாகவும் உள்ளதால், எளிதாகக் குறிப்பிட்ட இடங்களை அடைய முடியும். அதோடு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரவும் இது வழிசெய்யும்’ என்று மேலும் கூறுகிறார்.

உண்மைதான். சுற்றுலா வளர, புதுமைகள் நிச்சயம் தேவை.நம் தமிழ்நாட்டில், அதிக மக்களைக் கவர்ந்திழுக்கும் ஊட்டி, உலகப் புகழ் பெற்றது.மேட்டுப் பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலில் பயணம் செய்கையில் மலைக் காட்சிகள் நம் மனதிற்குப் படைக்கும் விருந்தினை விளம்பிட வார்த்தைகள் போதாது.

Dual Mode Vehicle
Dual Mode Vehicle
Japanstation
டையில் போய் ‘கடுகு’ கேட்டு அது அன்றைக்கு இல்லையென்றால் ‘சீரகம்’இருக்கிறது என்பார்களாம்.’இல்லை’ என்ற நெகடிவ் வார்த்தையைக் கடையில் உபயோகிப்பதைத் தவிர்க்கவே அவ்வாறு கூறுவார்களாம்!

ஆகாயப் பந்தலிலே

பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஊர்கோலம் போவோமா

உள்ளம் அங்கே ஓடுதம்மா

என்று மனம் றெக்கை கட்டிப் பறக்கும்.எவ்வளவு நேரத்திற்கு? யாருக்குத் தெரியும்?

அந்த ரயில் திடீரென நின்று விடும். இறக்கைக்கு இடைஞ்சல் வந்து, இதயம் விம்ம ஆரம்பித்து விடும். என்னாத்தே கண்ணையா, வடிவேலு காமெடி போல,’ வரும்…ஆனா வராது…கதைதான். ’ஓடும்… ஆனா ஓடாது…’ ‘எப்போது ஓடும், எப்போது நிற்கும்’ - அதுவே அந்த ரயிலின் சூட்சுமம். சுற்றுலாத் தலங்கள் வளர வேண்டுமானால் போக்குவரத்துச் சாதனங்கள் புதுப்பிக்கப்படுவதுதானே முறை. நம் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பவை இவையெல்லாம் கூடத்தானே? எப்பொழுது திருத்திக் கொள்ளப் போகிறோம்?

நான் சென்னை குறளகத்தில் உள்ள எனது அலுவலகத்தில் பணி புரிந்த நாட்களில், அங்குள்ள கதர், கிராமப் பொருள் அங்காடியில் ‘தேன்’ நன்கு விற்பனையாகும். பாட்டில்களில் அடைத்தும் வரும். லூசில், நாமே பாட்டில் கொண்டு போய் வாங்கியும் கொள்ளலாம்.ஆனால் பல நாட்களில் ‘ஸ்டாக் இல்லை’ போர்டு தொங்கும். அதிகம்

விற்பனையாகும் பொருளை முறையாகத் தருவிப்பதுதானே முறை.அதுதானே வியாபாரத்தின் அடிப்படை யுக்தியுமாகும்.அதைக்கூட நம்மவர்கள் சரி வரச் செய்ய வில்லையென்றால் என்ன செய்வது?தற்போது நிலைமை மாறியுள்ளதா என்று தெரியவில்லை.

முன்பெல்லாம் தொழில் நேர்மையும் உண்மையும் இருக்கும். அப்பொழுதெல்லாம் எந்தப் பொருளையும் ‘இல்லை’ என்று சொல்லும் வழக்கமே இல்லையாம். உதாரணமாக, கடையில் போய் ‘கடுகு’ கேட்டு அது அன்றைக்கு இல்லையென்றால் ‘சீரகம்’இருக்கிறது என்பார்களாம்.’இல்லை’ என்ற நெகடிவ் வார்த்தையைக் கடையில் உபயோகிப்பதைத் தவிர்க்கவே அவ்வாறு கூறுவார்களாம். என்னே அவர்களின் வியாபார நுணுக்கம்.

‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தில், திருட்டுப் பொருட்களைக் கொண்டு பிளாட் ஃபாரக் கடை போடும் கோபி (ஹாஜா) கூட, ஒருவர் வந்து ஏதோ ஒரு பொருள் கேட்க அது தன்னிடம் இல்லாததற்காக வருந்தி,நாளைக்கு அந்தப் பொருள் இருக்குமென்று அந்தக் கஸ்டமரிடம் உறுதி கூறுவார்!

சரி... விடுங்கள்.எப்பொழுது அந்த இரட்டைப் பயன்பாட்டு வாகனத்தில் ஏறிப் பார்ப்பது என்ற ஆர்வம் உங்களுக்கு வந்து விட்டதுதானே?

எனக்குந்தாங்க!

- ரெ.ஆத்மநாதன்

காட்டிகன், சுவிட்சர்லாந்து