Published:Updated:

Airbus Beluga: விமானத்தையே தூக்கிச் செல்லும் விமானம் - முதன்முறையாகச் சென்னை விசிட்! என்ன ஸ்பெஷல்?

Airbus Beluga | ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST

சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றைத் தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா (Airbus Beluga).

Airbus Beluga: விமானத்தையே தூக்கிச் செல்லும் விமானம் - முதன்முறையாகச் சென்னை விசிட்! என்ன ஸ்பெஷல்?

சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றைத் தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா (Airbus Beluga).

Published:Updated:
Airbus Beluga | ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST

சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST. உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம் ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது.

இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் வழக்கமான விமானங்களைப்போல் இல்லாமல் மிகப்பெரிய திமிங்கிலத்தைப்போல வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 56.16 மீட்டர், அகலம் 7.7 மீட்டர், உயரம் 17.25 மீட்டர். இது அதிகபட்சமாக சுமார் 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டது. அதாவது திமிங்கிலத்தின் வாயைப்போல விரியும் இதன் முன்பக்க கேபினில் மிகப்பெரிய எந்திரங்கள், கிரேன், சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றையே ஏற்றிச் செல்லலாம்.

Airbus Beluga | ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST
Airbus Beluga | ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST

இதில் இருக்கும் 'semi-automated main deck cargo loading system', Multi-Purpose-Pallet (MPP) மற்றும் 'automated on-board cargo loader (OBCL)' போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வளவு பெரிய பொருள்களாக இருந்தாலும் விமானத்தில் எளிதாக ஏற்றி, இறக்கிவிடும். உண்மையில் இதன் அருகில் நின்று பார்த்தல் ஒரு பெரிய ஹெலிகாப்டரை இந்த விமானம் விழுங்குவதுபோல் காட்சி அளிக்கும்.

1996 முதல் இயக்கப்பட்டு வரும் இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பெரிய அளவிலான பாகங்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இதன் சரக்குப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'Airbus' நிறுவனத்தின்  பெரிய விமானங்கள்
'Airbus' நிறுவனத்தின் பெரிய விமானங்கள்

உலகளவில் விமானம், ஹெலிகாப்டர், அதிவேக ஜெட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கிவரும் 'Airbus' நிறுவனம், இந்தப் பிரமாண்டமான ஏர்பஸ் பெலுகாவைப்போல, 'Airbus Beluga XL' என்னும் அதைவிட பெரிய விமானம் ஒன்றையும் தன்வசம் வைத்துள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குச் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன.