Cart is Empty
by ஜே.வி.நாதன்
இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களையும் தெய்வ வடிவில் வணங்கும் வழக்கம் இந்து சமயத்தின் ஆணி வேர். இந்து சமய வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுமே அறிவியல்பூர்வமானவை. நெற்றியில் திருநீறு பூசுவது முதல் தல விருட்சங்களை வலம் வருவது வரை இதில் அடக்கம். அபூர்வ மருத்துவ குணமுடைய மரம், செடி-கொடிகளை ‘தல விருட்சம்’ என்ற பெயரில் ஆலயங்களில் நட்டு வளர்த்தனர் முன்னோர். ஆலயங்களில் இருப்பதால், விருட்சங்களின் உண்மையான பலன்கள் புரியாவிட்டாலும், மக்கள் அவற்றை வழிபடுவதோடு, பாதுகாக்கவும் செய்வார்கள் என்பது நம் முன்னோர்களின் கணிப்பு! ஒன்பது கிரகங்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் - ஆகியவற்றுடன் தொடர்புகொண்ட விருட்சங்கள் உள்ள ஆலயங்களுக்கு, இந்த நூலின் ஆசிரியர் ஜே.வி.நாதன் நேரில் சென்று விரிவாக விவரங்கள் சேகரித்து இருக்கிறார். இதனை, ‘சக்தி விகடன்’ இதழில் ‘ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!’ என்ற தலைப்பில் அவர் தொடராக எழுதியபோதே, வாசகர்களிடத்தில் ஏக வரவேற்பு. அந்தத் தொகுப்பே அற்புத நூலாக இங்கே வடிவம் பெற்றுள்ளது. தல விருட்சங்கள் உள்ள ஆலயங்களின் தல புராணம், அங்கு உறைந்துள்ள தெய்வங்களின் அருட்சக்தி, விருட்சங்களின் அபூர்வ மருத்துவ குணங்கள், சங்க இலக்கியங்களில் இந்த விருட்சங்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள் என எதனையும் விட்டுவைக்காமல் விவரித்திருக்கும் இந்த நூல் ஓர் ஆராய்ச்சிக் கருவூலமாக பக்தர்களைப் பரவசப்படுத்தும். ஆன்மிக அன்பர்களும், மருத்துவ ஆர்வமுள்ளவர்களும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்!
RS. 88 More...by வேளுக்குடி கிருஷ்ணன்
‘கண்ணனை நினைக்காத நாளில்லையே...’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, கண்ணனைப் போற்றும் கதைகளை கண்ணனின் குணாதிசயமான சுறுசுறுப்போடும் துறுதுறுப்போடும் குதூகலத்தோடும் விளையாட்டு போல் எளியவரின் பக்தியாக உருக வைக்கும்படி அழகாகச் சொல்கிறது இந்த நூல். படிக்கப் படிக்க விறுவிறுப்பும் பக்திப் பரவசமும் நம்மை மெய்மறக்கச் செய்துவிடுகின்றன. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்விய நாமங்களைச் சொன்னாலே போதும் என்கின்றன புராணங்கள். கண்ணனின் திருநாமங்களுக்கு அத்தனை வலிமை உண்டு. அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, ‘பீஷ்மர் ஒரு ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்’ என்று சொல்லும் கண்ணன், அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன். பெருங்கருணை, ஜோதி வடிவமே பகவான், எமதருமனின் கனிவு, ஹரி... ஹரி.., திருமாலின் திருமேனி, வரம் தருவாய் வாசுதேவா.., கண்ணனின் விளையாட்டு, கட்டுண்டு கிடந்த கண்ணன், யமுனை ஆற்றிலே..! கண்ணன் இருக்க கவலை எதற்கு? மானம் காப்பான் தோழன்... என்று அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் கடலளவு தண்ணீரை அப்படியே உள்ளங்கைக்குள் அடக்கிவிடுகிற சாதுர்யத்துடன், வாழ்வின் உயரிய கருத்துகளை, மிகப் பெரிய குணத்தை நமக்கு உணர்த்துகிறது. அத்தகைய பரவசத்தோடு சக்தி விகடனில் வேளுக்குடி கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். ஓவியர் மாருதியின் வண்ண ஓவியங்கள் உயிரோட்டமாக நடமாடுகின்றன. கண்ணனின் நாமங்களைச் சொல்லும் இந்த நூல், வாசிப்போரின் மனசை தாமரையாகப் பூரிக்க வைக்கும்.
RS. 81 More...by பாரதி பாஸ்கர்
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற!’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்! எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு! விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்!
RS. 56 More...by கே.நிறைமதி அழகன்
மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா? ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள்வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 60 More...by லதானந்த்
ஆன்மிகப் பயணம் என்பது கோயில், மகான்களின் சமாதி ஆகியவற்றை தரிசிப்பதுடன் பயணமும் செய்வது. இதில் இரண்டு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. கோயிலுக்குச் செல்வது வரை புது இடத்தில் பயணம் செய்வது; அதில் பெறும் அனுபவம். பிறகு கோயிலின் தல வரலாறு, தல விருட்சம் விக்கிரகங்களின் விசேஷங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு மன நிறைவுடன் ஆண்டவனை தரிசிப்பது. போய் வந்த பிறகு இதைப் பார்க்கவில்லையே என்று வருந்தாமல் பார்த்துவிட்டு வருவது. வட நாட்டில் விஷ்ணு கோயில்களைப் பற்றி & குறிப்பாக வைணவ திவ்ய தேசத் திருத்தலங்களைத் தரிசித்ததைப்பற்றிய பயணக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் லதானந்த். பயணம் செல்லும் அனுபவம், கோயில்களை தரிசிக்கும் அனுபவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் இதில் அடக்கியிருக்கிறார். கோயில் சிறப்புகளும், பயணங்களில் ஏற்படும் திடீர்த் திருப்ப அனுபவங்களும், அவற்றைத் தவிர்க்கும் விளக்கங்களும் இந்த நூலில் இருக்கின்றன. அந்தந்த ஊர்களின் வழக்கு, சிறப்பு, ஊர்ப் பெயர் வந்த காரணம், முக்கியமான பெரிய ஊர்கள் அருகில் இருந்தால் அவற்றிலிருந்து தரிசிக்கும் தலம் எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் இருக்கிறது போன்ற அவசியமான பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஏற்படும் தொல்லைகள் குறித்த தகவல்கள் பயனுள்ளவை. குரங்கு, மற்ற மிருகங்களின் தொல்லை, மனிதத் தொல்லை, நில அமைப்பால் ஏற்படும் தொல்லை ஆகியவற்றையும் அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறைகளும் உள்ளன. சக்தி விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. வட நாட்டுக் கோயில்களைத் தரிசிக்க விழைபவர்களுக்குப் பயனுள்ள வழிகாட்டி. இதிலுள்ள நுணுக்கங்களைத் தெரிந்து கொண்டால் அதிகத் தொல்லை இல்லாமல் வட நாட்டு யாத்திரை செய்யலாம்!
RS. 63 More...by வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
சுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் புன்னகை தவழும் முருகனை பக்தர்கள் ஐம்புலன்களால் அனுபவித்து பரவசமடைகிறார்கள். அந்த தெய்வத்தின் மேல் பரவசம் கொண்ட, வேறு எந்தச் செல்வத்தையுமே பெரிதாக நினைக்காத பல அடியவர்கள், பக்தர்கள், முனிவர்கள், ஞானிகள் ஆகியோரின் வாழ்வில் நடந்தவற்றை இந்த நூலில் சுவைபட விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் ரா.கிருஷ்ணன். நக்கீரர், ஔவையார், முசுகுந்தர், நல்லியக்கோடார், சேந்தனார், அருணகிரிநாதர், குமரகுருபரர், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், பகழிக்கூத்தர், முத்துசாமி தீட்சிதர், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், நம் சம காலத்தவரான திருமுருக கிருபானந்தவாரியார் போன்ற ஏராளமான அடியார்களின் வாழ்க்கைச் சம்பவங்களை நூல் ஆசிரியர் விவரித்துள்ளார். இதில் இவர்கள் பத்தி செலுத்தியதை பிரதானப்படுத்துதோடு நின்று விடாமல் இவர்கள் பக்தியின் மகிமையையும் உயர்வையும் உலகத்தவர் புரிந்துகொள்ள முருகனே நேரில் வந்து இவர்களுக்குக் காட்சி கொடுத்ததையும், அடியவர்களுக்கு உதவுவதற்காக மற்றவர்களுக்கு செய்தி அறிவித்ததையும், கனவை, கனவுதானே என்று நாம் அலட்சியப்படுத்தாமல் இறைவனுடன் தொடர்புகொள்ள ஒரு பாலமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காக அடியவர்கள் கனவில் வந்து முருகன் அருள் செய்ததையும் அழகாக விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழில் பல அழகிய, அருமையான துதிப் பாடல்களைப் புனைய வைத்திருக்கிறான் செந்தில் குமரன். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்த நூல் முருகனின் தெய்வ சக்தியை உணர்ந்து அவனுடன் உறவாட வைக்கும் என்பது திண்ணம்.
RS. 105 More...by பொன்.காசிராஜன்
பயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.
RS. 67 More...by வி.ராம்ஜி
கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மாட்டானா? எனப் புலம்புவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருப்பட்டூர் வந்து இறைவனைத் தரிசித்து எல்லா வளமும் பெறலாம். இங்கு அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர் ஆலயங்கள் குறித்தும், திருப்பட்டூர் அற்புதங்கள் குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். ‘திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் சக்தி விகடனில் தொடராக வந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். படிக்கப் படிக்க மெய்சிலிர்க்கும் அற்புதங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. வியாக்ரபாதர் பூஜித்த காசி விஸ்வநாதர் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், புலிக்காலால் அவர் உண்டாக்கிய தீர்த்தக்குளம், விதி கூட்டி அருளிய பிரம்மா, சுந்தரர், மாசாத்தனார் என எல்லோரையும் படிக்கப் படிக்க, நாமும் அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது. திருப்பட்டூர் என்று சொல்லப்படும் திருப்பிடவூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தலபுராண தெய்வீகத் தகவல்களை அற்புதமாகத் தொகுத்து, ஆன்மிக அன்பர்களுக்கு புரியும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வி.ராம்ஜி. இங்கு வந்து தரிசித்ததால் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு நலம் பல பெற்ற பலரின் அனுபவங்களை நெகிழ்வோடு விவரித்துள்ளார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று சரண் புகுந்தோரின் வாழ்வில், எல்லா வளங்களும் அருளி ஆட்கொள்ளும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரையும் பிரம்மாவையும் தரிசிக்க இந்த நூல் உங்களையும் அழைத்துச் செல்லும்!
RS. 88 More...by மயன்
கோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேறு பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு!
RS. 81 More...by விகடன் பிரசுரம்
ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள் என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில், அந்தந்த ஆலயங்கள் பற்றிய அபூர்வத் தகவல்களோடு, வண்ணப் படங்களும் தரப்பட்டுள்ளது. செல்லும் வழி, தங்கும் இடம், எங்கே இருக்கிறது, கோயிலின் சிறப்புதினங்கள் என்ன, எப்போது
RS. 102 More...