Published:Updated:

`இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!'- கொந்தளித்த ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட அக்‌ஷய் குமார்

விமல் எலைசி விளம்பரத்தில் அக்‌ஷய்

எப்போதும் நாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று பெருமைப்பட்டோம். ஆனால்

`இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை!'- கொந்தளித்த ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட அக்‌ஷய் குமார்

எப்போதும் நாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று பெருமைப்பட்டோம். ஆனால்

Published:Updated:
விமல் எலைசி விளம்பரத்தில் அக்‌ஷய்

நடிகர்கள் பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கான பொருட்களின் விளம்பரங்களில் நடிக்கும்போது அதனை ரசிகர்கள் தட்டிக்கேட்கத் தயங்குவதில்லை. அதுவும் சமூக வலைதளங்கள் வந்தபிறகு நடிகர்களை தட்டிக்கேட்ட ரசிகர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத்தில் பான்மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்துவிட்டனர். அக்‌ஷய் குமார் இதற்கு முன்பு ஒரு முறை புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அவர் முன்பு சொன்னதைச் சுட்டிக்காட்டி ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அக்‌ஷய் குமார் பான்மசாலா விளம்பரத்தில் நடித்தற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விமல் எலைசி என்ற பான் மசாலா அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இதற்கு முன்பு நடிகர் அஜய் தேவ்கன், ஷாருக் கான் ஆகியோரும் விமல் விளம்பரங்களில் நடித்திருக்கின்றனர்.

அக்‌ஷய், அஜய்தேவ்கன், ஷாருக் கான்
அக்‌ஷய், அஜய்தேவ்கன், ஷாருக் கான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால் அக்‌ஷய் குமாருக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. இது தொடர்பாக சுபம் சோனி என்ற ரசிகர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உங்களிடமிருந்து இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விளம்பரப்படுத்தும் விமல் எலைசி பான்மசாலா ஒரு குட்கா வகையாகும் என்று தெரிவித்துள்ளார். சந்தர் என்ற ரசிகர் பதிவிட்டுள்ள செய்தியில், நீங்கள் இந்தியாவின் பிட்னஸ் சின்னம். ஆனால் விமல் விளம்பரத்தில் நடித்ததில் இருந்து அது கட்டுக்கதையாகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் ஒருவர்தான் குட்கா விளம்பரத்தில் நடிக்காமல் இருந்தீர்கள். எப்போதும் நாட்டைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று பெருமைப்பட்டோம். ஆனால் விமல் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் உங்களை தரம் தாழ்த்திக்கொண்டீர்கள். இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்று மற்றொரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மன்னிப்பு கேட்ட அக்‌ஷய்

ரசிகர்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அக்‌ஷய் குமார் பான்மசாலா விளம்பரத்தில் நடித்தற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று இரவில் டிவிட்டரில் பான் மசாலா விளம்பரத்தில் நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். பான்மசாலா விளம்பரத்தில் நடித்தற்கு ரசிகர்களிடமிருந்து வந்துள்ள எதிர்ப்புகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது. உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனி மேல் எதிர்காலத்தில் விளம்பரத்தில் நடிக்கும் போது கவனத்துடன் நடந்துகொள்வேன் என்றும், விமல் விளம்பர தூதர் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

அதே சமயம் ஒப்பந்தம் செய்த காலம் வரை தொடர்ந்து விளம்பரம் ஒளிபரப்பாகும். ஆனால் அதில் நடிப்பதற்காக கிடைத்த ஒட்டு மொத்த பணத்தையும் நல்ல காரியங்களுக்காக செலவிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். நடிகர் அஜய் தேவ்கன் இந்த விளம்பரத்தில் நடித்தபோதும் இது போன்று எதிர்ப்பு வந்தது. ஆனால் அதற்கு பதிலளித்த அஜய் தேவ்கன், விளம்பரத்தில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு என்று குறிப்பிட்டு இருந்தார். நடிகர் அமிதாப்பச்சனும் இதற்கு முன்பு பான்மசாலா விளம்பரத்தில் நடித்து ரசிகர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். இதனால் அவரும் இனிமேல் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism