Published:Updated:

சாலை வரை மலர் அலங்காரம்; நடிகையின் இசை நிகழ்ச்சி; மத அடையாளமின்றி நடிகர் பர்ஹான் அக்தர் திருமணம்!

பர்ஹான்-ஷிவானி

நான்கு ஆண்டுகளாக காதலித்து வரும் தனது காதலியை நடிகர் பர்ஹான் அக்தர் புனே அருகே நாளை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

சாலை வரை மலர் அலங்காரம்; நடிகையின் இசை நிகழ்ச்சி; மத அடையாளமின்றி நடிகர் பர்ஹான் அக்தர் திருமணம்!

நான்கு ஆண்டுகளாக காதலித்து வரும் தனது காதலியை நடிகர் பர்ஹான் அக்தர் புனே அருகே நாளை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

Published:Updated:
பர்ஹான்-ஷிவானி

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான பர்ஹான் அக்தர் கடந்த நான்கு ஆண்டுகளாக ஷிபானி தண்டேகர் என்பவரைக் காதலித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இத்திருமணம் நாளை புனே அருகே மலை நகரமான கண்டாலா என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடக்கிறது. பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துவருகிறது. 17-ம் தேதி இரவு திருமண சடங்குகள் தொடங்கின. இதில் மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இன்று இரவு இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மணப்பெண்ணின் நெருங்கிய தோழியாக கருதப்படும் நடிகை ரியா சக்ரவர்த்தி ஆடல் பாடலுடன் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். திருமணம் நடக்க இருக்கும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் நடிகை ஷபானா ஆஸ்மியின் பண்ணை வீட்டில் இருந்து முக்கிய சாலை வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். பர்ஹான் அக்தர் தனது திருமணத்தை வழக்கமான முறையில் நடத்தாமல் வித்யாசமாக புரட்சிகரமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

பர்ஹான்-ஷிவானி
பர்ஹான்-ஷிவானி

முஸ்லிம் முறைப்படியும் இல்லாமல், மராத்தியர்களின் முறைப்படியும் இல்லாமல் வித்யாசமான முறையில் இத்திருமணம் நடைபெறுகிறது. மணமக்கள் இருவரும் திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்கள் முன்பு உறுதிமொழிப்பத்திரத்தை வாசித்து தங்களது திருமணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள்கூட எளிய முறையில் வெள்ளை ஆடையுடன் வந்தால்போதும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பர்ஹான் அக்தரின் தாயார் ஹனி இரானி கூறுகையில், "திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர் "என்று தெரிவித்தார். பர்ஹான் அக்தரும் தனது திருமணத்தை எளிய முறையில் தனிப்பட்ட ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நடத்தவே விரும்புவதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். திருமணத்திற்கு ஷாருக்கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கலந்து கொள்வார்களா என்று தெரியவில்லை. திருமணத்திற்கு மொத்தமே 50 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்காக திருமணம் நடக்க இருக்கும் பண்ணை வீட்டிற்கு அருகில் நீச்சல் குளத்துடன் கூடிய பங்களாக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு மும்பையில் பாலிவுட் நண்பர்களுக்கு பர்ஹான் அக்தர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

காதலில் விழுந்தது எப்படி?

பர்ஹான் அக்தர் நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளராக இயக்குனராக, பாடகராகவும், கதாசிரியராகவும் அனைவராலும் அறியப்பட்டவர். டிவி நிகழ்ச்சிகளையும் தயாரித்து இருக்கிறார். `ஐ கேன் டு தட்' என்ற டிவி நிகழ்ச்சியை பர்ஹான் அக்தர் நடத்தினார். இதில் இந்திய-ஆஸ்திரேலிய பாடகியான ஷிபானியும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் தான் இருவருக்கும் இடையே முதன் முதலில் அறிமுகம் ஆனது. அதன் பிறகு இருவரும் நெருங்கிப் பழகி காதலிக்க ஆரம்பித்தாலும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. முதல் முறையாக நடிகை தீபிகா படுகோனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். இருவரும் தங்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொண்ட பிறகு அடிக்கடி சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வந்தனர். இருவருக்கும் 7 வயது வித்யாசம் இருக்கிறது. ஷிபானிக்கு 40 வயதாகிறது. பர்ஹான் அக்தருக்கு 47 வயதாகிறது.