Published:Updated:

படத்தில் வில்லன்; நிஜவாழ்க்கையில் ஹீரோ: உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க உதவும் சோனுசூட்!

சோனுசூட்

உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர நடிகர் சோனுசூட் உதவி செய்து வருகிறார். இது வரை 300 பேர் இந்தியா வர உதவி செய்துள்ளார்.

படத்தில் வில்லன்; நிஜவாழ்க்கையில் ஹீரோ: உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை மீட்க உதவும் சோனுசூட்!

உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர நடிகர் சோனுசூட் உதவி செய்து வருகிறார். இது வரை 300 பேர் இந்தியா வர உதவி செய்துள்ளார்.

Published:Updated:
சோனுசூட்

நடிகர் சோனுசூட் திரைப்படங்களில் வில்லனாக நடிக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக நடந்து கொள்கிறார். கொரோனா காலத்தில் மும்பை போன்ற நகரங்களில் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டவர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதியை செய்து கொடுத்தார். அதிலிருந்து எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனே முதலில் நிற்பது சோனு சூட்டாகவே இருந்து வருகிறார். தற்போது உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு தூதரகம் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கார்கிவ் நகரில் இருந்து உடனே வெளியேறும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் நடிகர் சோனு சூட் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். ஏற்கனவே சோனுசூட் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார். எனவே உக்ரைனில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அதிக அளவில் உதவி கேட்டு சோனுசூட்டிற்கு வாட்ஸ் அப் மூலம் கோரிக்கை விடுத்தனர்.

மீட்பு பணியில் இந்திய விமானப்படை விமானம்
மீட்பு பணியில் இந்திய விமானப்படை விமானம்

இதையடுத்து சோனு சூட் உக்ரைனின் எல்லை நாடுகளான போலந்து மற்றும் ரொமேனியாவில் உள்ள இந்திய அமைப்புகளுடன் சேர்ந்து உக்ரைனில் இருந்து எல்லைக்கு வரும் இந்திய மாணவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவைக்கும் வேலையை செய்து வருகிறார். இதற்காக டாக்சி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அதோடு உக்ரைனில் இருந்து பாதுகாப்பான முறையில் எல்லையோர பகுதிகளுக்கு மாணவர்கள் மாற்று வழியில் வருவது குறித்தும் அங்கு இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். சோனு சூட் உதவியால் உக்ரைனில் இருந்து பாதுகாப்பான முறையில் போலந்து எல்லைக்கு வந்து அங்கிருந்து டெல்லி வந்து சேர்ந்துள்ள இந்திய மாணவர் லட்சுமண் அகர்வாலிடம் இது குறித்து கேட்டதற்கு, சோனுசூட் அணியை சேர்ந்தவர்கள்தான் நான் உக்ரைனில் இருந்து பாதுகாப்பான முறையில் போலந்து எல்லைக்கு வர வழிகாட்டினர். நான் போலந்து எல்லைக்கு வந்து சேரும் வரை எங்களுடன் தொடர்பில் இருந்தனர் என்று தெரிவித்தார். சோனுசூட் உதவியால் இதுவரை 300 மாணவர்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.