Published:Updated:

"ஜூஹி சாவ்லாவிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைக்கத் தயார்! ஆனால்..."- டெல்லி ஐகோர்ட்டின் நிபந்தனை

ஜூஹி சாவ்லா

நடிகை ஜூஹி சாவ்லா 5ஜி தொடர்பாக தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகக் குறைக்கத் தயாராக இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"ஜூஹி சாவ்லாவிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைக்கத் தயார்! ஆனால்..."- டெல்லி ஐகோர்ட்டின் நிபந்தனை

நடிகை ஜூஹி சாவ்லா 5ஜி தொடர்பாக தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகக் குறைக்கத் தயாராக இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published:Updated:
ஜூஹி சாவ்லா

நடிகை ஜூஹி சாவ்லா கடந்த ஆண்டு நாட்டில் 5ஜி தொழில் நுட்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெஆர். மிதா கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி, நடிகை ஜூஹி சாவ்லாவின் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு விளம்பரத்திற்காக ஜூஹி சாவ்லா இம்மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறி ரூ.20 லட்சம் அபராதமும் விதித்தார்.

விசாரணையின் போது கோர்ட் நிகழ்வுகளை ஜூஹி சாவ்லா நேரடியாக ஒளிபரப்பு செய்ததோடு அடிக்கடி கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் சாட்சிகளைக் குறுக்கீடு செய்தார். இதனால் கோர்ட் நடவடிக்கையை தடுக்க முயன்று கோர்ட்டை அவமதித்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த அபராதத் தொகையை ஜூஹி சாவ்லா செலுத்தாமல் இருந்து வந்தார். மேலும், அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

ஜுஹி சாவ்லா
ஜுஹி சாவ்லா

இம்மனு நீதிபதிகள் விபின், ஜஸ்மீத் சிங் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அபராதத் தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகக் குறைப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால், அபராதத் தொகையை குறைப்பதாக இருந்தால், அதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை மனுதாரர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

அதன்படி, "மனுதாரர் பிரபலமானவராக இருப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க வேண்டும். அதோடு சில பொது சேவைகளும் செய்யவேண்டும். நல்ல விழிப்புணர்வுக்கு மனுதாரரை இச்சமுதாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெல்லி சட்ட சேவை மையமும் மனுதாரரை அணுகி விழிப்புணர்வு பிரசாரத்திற்கு அவரை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.