Published:Updated:

``எங்களைச் சோதிப்பதாகக்கூறி உடைகளை அவிழ்த்தான்!"- சிறுவயது துன்புறுத்தல் குறித்து கங்கனா ரணாவத்

லாக் அப் ஷோவில் கங்கனா

லாக் - அப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கங்கனா ரணாவத், "தான் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!" என்று தெரிவித்தார்.

``எங்களைச் சோதிப்பதாகக்கூறி உடைகளை அவிழ்த்தான்!"- சிறுவயது துன்புறுத்தல் குறித்து கங்கனா ரணாவத்

லாக் - அப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கங்கனா ரணாவத், "தான் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்!" என்று தெரிவித்தார்.

Published:Updated:
லாக் அப் ஷோவில் கங்கனா

நடிகை கங்கனா ரணாவத் லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவை ஒடிடி தளத்தில் நடத்தி வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, நிகழ்ச்சியின்போது பகிர்வர். இதில் போட்டியாளர் சாய்ஹா ஷிண்டே சக போட்டியாளர்களிடம் யாராவது ஒருவர் தங்களது வாழ்க்கையில் நடந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதில் கலந்து கொண்ட முன்னாவர் பாருகி என்ற போட்டியாளர், `சிறு வயதில் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்' என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 6 வயதில் தொடங்கிய இந்த துன்புறுத்தல் 11 வயது வரை தொடர்ந்தது. அது குறித்து என்னால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.

போட்டியாளர்களுடன் கங்கனா
போட்டியாளர்களுடன் கங்கனா

இது குறித்து எனது குடும்பத்தினர் உள்பட யாரிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. இதுபோன்ற காரியத்தில் ஈடுபட்ட அனைவரும் எனது உறவினர்கள் என்று தெரிவித்தார். அவர் துணிச்சலுடன் பேசியதை வரவேற்ற நடிகை கங்கனா ரணாவத் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டார். தனது கிராமத்தில் தான் சின்ன வயதாக இருக்கும் போது தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய அவர், "நான் வசித்த அதே கிராமத்தைச் சேர்ந்த பையன் அடிக்கடி என்னை தொடக்கூடாத இடத்தில் தொடுவான். அந்த வயதில் எனக்கு எதுவும் புரியவில்லை. அந்த பையன் என்னை விட 4 வயதுதான் மூத்தவன். எங்கள் அனைவரையும் கூப்பிட்டு ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி எங்களை சோதிப்பான். அந்த நேரத்தில் இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு குழந்தையும் தங்களது குடும்பம் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும், குழந்தைகள் இது போன்ற சம்பவங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனவே அவர்களிடம் நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் எது என்பதை கற்றுக்கொடுக்கவேண்டும்" என்று கங்கனா தெரிவித்தார். கங்கனா ரணாவத் இதற்கு முன்பு இதே நிகழ்ச்சியில் தான் திருமணமான ஒருவருடன் தொடர்பில் இருந்ததையும் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism