Published:Updated:

"கொரோனா என்பது சிறிய வகை காய்ச்சல்தான்"- கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட கங்கனா ரணாவத்.

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் ஷில்பா ஷெட்டி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவை அழிப்பேன் என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கடுமையாக பரவிவருகிறது. பாலிவுட்டில் பெரும்பாலானோருக்கு இத்தொற்று ஏற்பட்டுவிட்டது. இப்போது சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை கங்கனா ரணாவத்தையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மிகவும் சோர்வாக உணர்கிறேன். கடந்த சில நாட்களாக மிகவும் பலவீனமாகவும், அதேசமயம் கண் எரிச்சலும் இருக்கிறது. உடனே கொரோனா சோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு இப்போது வந்துள்ளது. அதில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன்.

ஷில்பா ஷெட்டி  குடும்பம்
ஷில்பா ஷெட்டி குடும்பம்

இந்த கொரோனா வைரஸை அழித்துவிடுவேன் என்று எனக்கு தெரியும். எந்த சக்தியும் உங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் பயந்தால் உங்களை அது பயமுறுத்திவிடும். கொரோனா என்பது சிறிய வகை காய்ச்சல்தான். அதனை பெரிதுபடுத்திவிட்டனர். வாருங்கள் கொரோனாவை இணைந்து அழிப்போம். 'ஹர ஹர மகாதேவ்' என்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசம் செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வந்து அதனை தடுத்துவிட்டதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.

இதே போன்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்திலும் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த 10 நாட்களாக எனது குடும்பத்திற்கு மிகவும் கஷ்டமான நாட்களாக இருக்கிறது. எனது மாமா மற்றும் அத்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் எனது இரண்டு மகன்களுக்கும் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எனது அம்மாவுக்கும் இறுதியாக எனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் அவரரவர் அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். எனக்கு அதிர்ஷ்டவசமாக தொற்று ஏற்படவில்லை. எனது வேலைக்காரர்கள் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சியும் எங்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்தது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் வாருங்கள்." என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், அஸ்தோஷ் ராணா, கேத்ரினா கைஃப், அக்‌ஷய் குமார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி

இதற்கிடையே கொரோனா மூன்றாவது அலையின்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வந்த செய்தியை தொடர்ந்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையை இப்போதே தொடங்கிவிட்டது. குழந்தைகளை கொரோனா தாக்கினால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துவருகிறது. தற்போது இருக்கும் வெண்டிலேட்டர்கள் குழந்தைகளுக்கு பொருந்தாது. எனவே குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான வெண்டிலேட்டர் வசதிகளை செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதோடு இப்பணிகளை மேற்கொள்ள சிறப்புப் பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு டாக்டர்களும் இடம் பெற்று இருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு