Published:Updated:

கத்ரீனா கைஃப் திருமணம்: 120 பேருக்கு மட்டுமே அழைப்பு; தயாராகும் 200 வருட பழைமையான கோட்டை!

கத்ரீனா கைஃப்-விக்கி

ராஜஸ்தானில் நடக்க இருக்கும் தங்களது திருமணத்திற்கு 120 பேரை மட்டும் அழைக்க நடிகை கத்ரீனா கைஃப்-விக்கி கவுசல் ஜோடி முடிவு செய்துள்ளனர்.

கத்ரீனா கைஃப் திருமணம்: 120 பேருக்கு மட்டுமே அழைப்பு; தயாராகும் 200 வருட பழைமையான கோட்டை!

ராஜஸ்தானில் நடக்க இருக்கும் தங்களது திருமணத்திற்கு 120 பேரை மட்டும் அழைக்க நடிகை கத்ரீனா கைஃப்-விக்கி கவுசல் ஜோடி முடிவு செய்துள்ளனர்.

Published:Updated:
கத்ரீனா கைஃப்-விக்கி

நடிகை கத்ரீனா கைஃப் தனது காதலன் விக்கி கவுசலை வரும் 9-ம் தேதி ராஜஸ்தானில் 200 ஆண்டுகள் பழமையான கோட்டையில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இத்திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகிறது. ஆனால் கத்ரீனா கைஃப் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இத்திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு கத்ரீனா மற்றும் கவுசல் தரப்பில் மிகவும் நெருக்கமான பாலிவுட் பிரபலங்கள் 120 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசியும் போட்டவர்கள் ஆவர். ராஜஸ்தானின் மதோபூர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் உள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடக்கும் இத்திருமண ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளது. திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர கிஷன் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கத்ரீனா-விக்கி கவுசல்
கத்ரீனா-விக்கி கவுசல்

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் போக்குவரத்து ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை செய்ய கத்ரீனா மற்றும் விக்கி கவுசல் குடும்பத்தினர் 5ம் தேதியே ஜெய்ப்பூர் புறப்பட்டு செல்கின்றனர். திருமண ஜோடி 6ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். 7ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. இத்திருமணத்தில் பங்கேற்க சல்மான்கான் மற்றும் ரன்பிர் கபூர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ரன்பிர் கபூரும், கத்ரீனாவும் 5 ஆண்டுகளாக வெளிப்படையாக அறிவித்து காதலித்ததோடு தனி வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism