Published:Updated:

நைட் பார்ட்டி; ஆப்பிரிக்க கும்பல்; பாலிவுட் பிரபலங்களைச் சுற்றும் போதை வலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அர்மான் கோலி, மம்தா குல்கர்னி
அர்மான் கோலி, மம்தா குல்கர்னி

பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ந்து போதைப்பொருள் வழக்குகளில் சிக்கி வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டின் பொருளாதாரம், பாலிவுட் சினிமா இவற்றின் தலைநகரமாகக் கருதப்படும் மும்பை தற்போது போதைப்பொருட்களின் கூடாரமாக இருக்கிறது. ஆரம்பத்தில் போதைப்பொருள் மற்றும் சாராய விற்பனை தாதாக்களின் கையில் இருந்தது. ஆனால் இப்போது அது அபின், சரஸ், கோகைன், கஞ்சா என்று உருமாறி மும்பையைச் சுற்றி வலம் வருகிறது. போதைப்பொருள் பல நூறு கோடிகளில் பணம் புழங்கும் அந்தத் தொழிலில் உயிரைக் காவு கேட்கும் நிறைந்திருக்கிறது. தற்போது ஆப்பிரிக்க கும்பல் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த போதைப்பொருட்களின் முக்கிய வாடிக்கையாளர்களாக பாலிவுட் பிரபலங்கள் இருக்கின்றனர். பாலிவுட்டில் இருக்கும் பெரும்பாலானோர் போதைப்பழக்கத்திற்கு எதாவது ஒரு வகையில் அடிமையாகி அதில் இருந்து மீண்டவர்களாகவே இருக்கின்றனர். பாலிவுட்டில் முதன் முதலில் நடிகர் சஞ்சய் தத் 1982-ம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு 5 மாதங்கள் சிறை தண்டனைக்குப் பிறகு வெளியில் வந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் 12 வயதிலேயே போதைப்பொருள்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார். அதன் பிறகு 2001-ம் ஆண்டு நடிகர் பர்தீன் கான் போதைப்பொருள் வைத்திருந்ததாகப் பிடிபட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காமெடி நடிகர் பாரதி சிங்கும் அவரது கணவரும் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் கோவாவில் நடந்த பார்ட்டில் ரெய்டு நடத்தியபோது, போதைப்பொருள் வைத்திருந்ததாக நடிகர் கபில் ஜவேரி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த பார்ட்டிக்கு கபில் ஜவேரிதான் ஏற்பாடு செய்திருந்தார். டிவி நடிகை பிரீத்திகா சவுகான் கஞ்சா வைத்திருந்ததாகக் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். மறைந்த பாலிவுட் நடிகை பர்வீன் பாபி போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது மறைவின்போது போலீஸ் தரப்பிலிருந்தே தகவல்கள் வெளியாகின. மேலும் இன்றைய முக்கிய பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த போதைப் பொருள் பயன்படுத்தும் வழக்கமுடையவர்கள் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகின்றன.

அர்மான் கோலி, மம்தா குல்கர்னி
அர்மான் கோலி, மம்தா குல்கர்னி

கடந்த ஆகஸ்ட் நடிகர் அர்மான் கோலி வீட்டில் ரெய்டு நடத்தி கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி கோவாவில் நடிகர் அர்ஜூன் ராம்பால் காதலியின் சகோதரர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட போது அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்தது. பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு மஹாராஷ்டிராவில் போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையே நடத்தி வந்தார். நடிகர்களின் ரன்பீர் கபூர் தான் நடிப்பு கல்லூரியில் படிக்கும்போதே கஞ்சா பயன்படுத்துவேன் என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

இப்போது நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி போலீஸாரிடம் சிக்கி இருக்கிறார். அவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்துவதாக தெரிவித்திருக்கிறார். இவற்றை கேட்ட அதிகாரிகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்தனர். மற்ற திரைப்பட த்துறையில் இல்லாத ஒரு பழக்கம் பாலிவுட்டில் மட்டும் எப்படி இந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று அனைவரும் நினைக்கலாம்.

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...
ஆர்யான் கான்
ஆர்யான் கான்

பாலிவுட் என்றாலே நைட் பார்ட்டிகள்தான் பிரபலம். மேற்கு புறநகர் பகுதியில் உள்ள கிளப், பஃப்களில் தினமும் பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள் பார்ட்டி கொடுத்துக்கொண்டுதான் இருப்பர் என்கிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், துக்கமான ஒன்றாக இருந்தாலும் சரி பார்ட்டிக்கு பஞ்சமிருக்காது. இந்த பார்ட்டிகளில் மது பானங்கள் ஆறாக ஒடும். அதோடு மற்றொரு பக்கம் போதைப்பொருட்களும் மிகவும் சர்வ சாதாரணமாக கிடைக்கும். இந்த பார்ட்டிக்கு வரும் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் பார்ட்டிக்கு வந்து விட்டால் தானாவே இப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார் எனச் சொல்லப்படுகிறது. அவர்களின் இப்பழக்கம் வீடு வரை செல்கிறது. வீடு வரை போதைப்பழக்கம் செல்லும் போது வீட்டில் உள்ள மற்றவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையானால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்வதற்காகவே ஆப்கனில் இருந்து பாகிஸ்தான் வழியாக பஞ்சாபிற்கு கடத்திக் கொண்டு வரப்படுகிறது. பஞ்சாப்பில் இருந்து விமானத்தில் கொண்டு வந்தால் பிடித்துவிடுவார்கள் என்று பஞ்சாப்பில் இருந்து இரு சக்கர வாகனங்களில் போதைப்பொருள் மும்பைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது போன்று பஞ்சாப்பில் இருந்து இரு சக்கர வாகனத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த கும்பல் பிடிபட்டது. இது தவிர ஆப்பிரிக்க கும்பல் தங்களது நாடுகளில் இருந்து தேவையான அளவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர். கஞ்சா ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இருந்து சர்வ சாதாரணமாக வாகனங்களில் கடத்திக் கொண்டு வந்து மும்பையில் விற்பனை செய்யப்படுகிறது. போதைப்பொருள், பாலிவுட், கடத்தல்காரர்கள் மூன்றும் ஒரு இணைப்பு சங்கிலி போன்று இருக்கிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த சில மாதங்களில் ரெய்டு நடத்தி ஏராளமான போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்தனர். ஆனாலும் அவர்களால் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க முடியவில்லை. மும்பையில் இருந்து கோவா செல்லும் கப்பலில் நடக்கும் பார்ட்டியில் போதைப்பொருள் சப்ளை உண்டு என்று சொல்லியே பார்ட்டிக்கான டிக்கெட்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்கின்றனர் என்று போலீஸார் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பலரும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும், பாலிவுட் பிரபலங்களாக இருப்பதாலும் பலரது பெயர் வெளியில் தெரிவதில்லை என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு