Published:Updated:

`இந்தக் காரணத்துக்காகதான் ஜெயாவையே திருமணம் செய்து கொண்டேன்' - பர்சனல் பகிர்ந்த அமிதாப் பச்சன்

போட்டியாளருடன் அமிதாப்பச்சன்

பிரியங்காவின் கையில் வரையப்பட்டு இருந்த டாட்டூ குறித்தும் அமிதாப்பச்சன் கேட்டறிந்தார்.

`இந்தக் காரணத்துக்காகதான் ஜெயாவையே திருமணம் செய்து கொண்டேன்' - பர்சனல் பகிர்ந்த அமிதாப் பச்சன்

பிரியங்காவின் கையில் வரையப்பட்டு இருந்த டாட்டூ குறித்தும் அமிதாப்பச்சன் கேட்டறிந்தார்.

Published:Updated:
போட்டியாளருடன் அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சொந்த படம் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பித்து கடுமையான நஷ்டத்தை சந்தித்தார். அமிதாப்பச்சனை கடன் தொல்லையில் இருந்து தூக்கிவிட்டது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி ஏராளமான கோடீஸ்வரர்களை உருவாக்கியது போல் நிகழ்ச்சியை நடத்தும் அமிதாப் பச்சனையும் கடனில் இருந்து தூக்கிவிட்டது. இந்நிகழ்ச்சியை நடத்தும் போது அடிக்கடி போட்டியாளர்களுடன் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதை அமிதாப்பச்சன் வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் தனது உணவு பழக்கங்கள் குறித்து போட்டியாளர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார். தற்போது மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். பிரியங்கா என்ற போட்டியாளர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது அவருக்கு மிகவும் நீளமான முடி இருந்தது.

ஜெயா பச்சனுடன் அமிதாப்பச்சன்
ஜெயா பச்சனுடன் அமிதாப்பச்சன்

அதை பார்த்த அமிதாப்பச்சன் அவரின் முடியை வெகுவாக பாராட்டினார். அதோடு முடியை அவிழ்த்து காட்டும்படி கேட்டுக்கொண்டார். பிரியங்காவும் தனது முடியை அவிழ்த்து முன்பகுதியில் கொண்டு வந்து போட்டார். அதனை பார்த்த அமிதாப்பச்சன் தனக்கு நீளமான முடி பிடிக்கும் என்றும், ஜெயாபச்சனுக்கு நீளமான முடி இருந்ததால்தான் அவரை திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்தார். உடனே அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பிரியங்காவின் கையில் வரையப்பட்டு இருந்த டாட்டூ குறித்தும் அமிதாப்பச்சன் கேட்டறிந்தார்.

அமிதாப்பச்சன் 1971ம் ஆண்டு குட்டி என்ற படத்தில் நடித்த போது முதல் முறையாக ஜெயா பச்சனை சந்தித்தார். அதன் பிறகு பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 1973ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.