பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், இந்தி திரையுலகின் டாப் மோஸ்ட் ஹீரோயின். இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து திரைப்படத்துறைக்கு வந்த தீபிகா படுகோன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தீபிகா படுகோன் நடித்த `கெஹ்ரையான்' திரைப்படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு, விமர்சனம் எனக் கலவையாகப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு வாழ்க்கையில் கிடைத்த நல்ல ஆலோசனைகள் மற்றும் மோசமான ஆலோசனைகள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``நான் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்திருந்தபோது, எனது 18 வயதில், என்னிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படி ஆலோசனை சொன்னார்கள். ஆனால் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆபரேஷனும் செய்து கொள்ளவில்லை. இதனை எனக்குக் கிடைத்த மிகவும் மோசமான ஆலோசனையாகப் பார்க்கிறேன்.
நல்ல ஆலோசனைகளைப் பொறுத்தவரை, நடிகர் ஷாருக்கான் நிறைய வழங்குவார்.
அவற்றில் பலவற்றை நான் பின்பற்றுவேன். அதில் மிகவும் முக்கியமானது, `எப்போதும் உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்' என்று அவர் கூறியதுதான்'' என்று தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோன் தற்போது நடிகர் ஷாருக் கானுடன் சேர்ந்து `பதான்' படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் அமிதாப்பச்சன், பிரபாஸ் சேர்ந்து நடிக்கும் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். இது தவிர ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் `ஃபைட்டர்' படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் வரும் 2023-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.