Published:Updated:

ஜாக்குலின் பெர்னாண்டஸ்: ரூ.7 கோடிக்கு நகை, தனி விமானம்; சுகேஷ் நட்பால் முடக்கப்பட்ட சொத்து!

ஜாக்குலின்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்: ரூ.7 கோடிக்கு நகை, தனி விமானம்; சுகேஷ் நட்பால் முடக்கப்பட்ட சொத்து!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

Published:Updated:
ஜாக்குலின்

மருந்து கம்பெனி நிறுவனரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவர் மிரட்டி பறித்த பணத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு பணத்தை செலவு செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்தார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடிகைகளுக்கு பரிசுப்பொருட்கள் மட்டும் வாங்கிக்கொடுத்திருக்கிறார். இதில் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருள்களைப் பெற்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், குதிரை, 15 ஜோடி காதனிகள், 5 ஆடம்பர பேக், மிகவும் அதிக விலை மிக்க 4 பூனைக்குட்டிகள் போன்ற பல பரிசுப்பொருட்களை வழங்கினார். அதோடு ஜாக்குலின் சகோதரிக்கு ரூ.1.50 லட்சம் அமெரிக்க டாலர்களும், ரூ.15 லட்சம் ஜாக்குலின் சகோதரருக்கும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை பல முறை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

ஜாக்குலின்
ஜாக்குலின்

ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான் சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசுப்பொருட்கள் வாங்கியதை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார். இதனால் அவர் வெளிநாடு செல்லக்கூட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். ஜாக்குலின் அடிக்கடி தனி விமானத்தில் சென்னை வந்து செல்ல சுகேஷ் பல கோடி ரூபாயை செலவு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் புதிய திருப்பமாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் ஜாக்குலின் பெயரில் வங்கிகளில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்களும் அடங்கும். அதோடு தொழிலதிபரின் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் சுகேஷ் ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு கணித்துள்ளது. மேலும் ஜாக்குலின் குடும்ப உறுப்பினர்களுக்கு 1.73 லட்சம் அமெரிக்க டாலர், 27 ஆயிரம் ஆஸ்திரேலியா டாலர் கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுகேஷ் சிறையில் இருந்து ஒரு ஆண்டு வெளியில் வந்த போது ஜாக்குலின், சுகேஷ் இருவரும் அடிக்கடி சென்னையில் சந்தித்துப் பேசினர். டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாகக்கூறி பல கோடி ரூபாயை சுகேஷ் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நடிகை நூராவிற்கும் சுகேஷ் சந்திரசேகர் பரிசுப்பொருட்களை கொடுத்திருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism