Published:Updated:

மத்தியப் பிரதேசம் டு மும்பை - சல்மான் கானைச் சந்திக்க சைக்கிளில் வந்த ரசிகர்; அவரின் ரியாக்ஷன் என்ன?

சமீருடன் சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கானைச் சந்திப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ரசிகர் சைக்கிளிலேயே பயணித்து மும்பை வரை வந்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் டு மும்பை - சல்மான் கானைச் சந்திக்க சைக்கிளில் வந்த ரசிகர்; அவரின் ரியாக்ஷன் என்ன?

பாலிவுட் நடிகர் சல்மான் கானைச் சந்திப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ரசிகர் சைக்கிளிலேயே பயணித்து மும்பை வரை வந்துள்ளார்.

Published:Updated:
சமீருடன் சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க சல்மான் கான் வீட்டிற்கு வெளியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அவர்களைப் பார்த்து சல்மான் கான் தனது வீட்டு மாடியிலிருந்து கையசைத்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள் மீண்டும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் நின்ற சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் கலைந்து செல்லும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து நகரவில்லை. இதனால் போலீஸார் லேசாகத் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். சல்மான் கானுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

சல்மான் கான்
சல்மான் கான்

டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஸ்னோய் என்பவர் ஏற்கெனவே சல்மான் கானை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். எனவே சல்மான் கானுக்குத் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவருக்கு இந்தியா முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் பல்வேறு பகுதியிலிருந்து சல்மான் கானை காண திடீரென மும்பை வந்துவிடுகின்றனர்.

அது போன்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சல்மான் கானை காணவேண்டும் என்ற ஆசையில் சைக்கிளில் கிளம்பிவிட்டார். சமீர் என்பவர் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்து சல்மான் கானைச் சந்திக்கப் புறப்பட்டார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டே மும்பை வந்தார்.

அவர் நேராக மும்பை பாந்த்ராவில் சல்மான் கான் வசிக்கும் வீட்டிற்குச் சென்றார். சமீர் வந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக சல்மான் கானும் வீட்டிலிருந்தார். அங்கு சமீர் மத்தியப் பிரதேசத்திலிருந்து சைக்கிளில் வந்திருக்கும் செய்தி சல்மான் கானுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சமீரை அழைத்து சல்மான் கான் பேசினார். அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

சமீருடன் சல்மான் கான்
சமீருடன் சல்மான் கான்

இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கிறது. ரசிகரைச் சந்தித்துப் பேசியது தொடர்பாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் சல்மான் கானை பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம், ரசிகரின் இந்த ரிஸ்க்கான செயலைப் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.