Published:Updated:

உத்தரப் பிரதேசத்தின் `ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டம்... விளம்பர தூதராக கங்கனா ரணாவத் நியமனம்!

நடிகை கங்கனா ரணாவத் உத்தரப்பிரதேச அரசின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கங்கனா ரணாவத் புதிதாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநில மொரதாபாத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் மேற்கொண்டுள்ள நலத்திட்டப்பணிகளை வெகுவாகப் பாராட்டிய கங்கனா மாநில அரசு செயல்படுத்தி வரும் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் விதமாகத் தொழிற்சாலைகளை தொடங்க இத்திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு தொடங்கி இருக்கிறது. அந்தத் திட்டத்தின் விளம்பர தூதராக கங்கனா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் நவ்நீத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், நடிகை கங்கனா ரணாவத் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது கங்கனாவை அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து விட்டு செல்லும்படி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.

கங்கனாவுடன் யோகி  ஆதித்யநாத்
கங்கனாவுடன் யோகி ஆதித்யநாத்

இந்தச் சந்திப்பு நிகழும் முன்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் செல்வதாக பதிவிட்டு இருந்தார். மஹாராஷ்டிரா அரசுடன் கடுமையான போதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் கங்கனா இப்போது உத்தரப்பிரதேசத்தின் விளம்பர தூதராகி இருக்கிறார்.

ஏற்கெனவே நடிகர் சோனு சூட் டெல்லி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் டெல்லி விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட பிறகு வருமான வரித்துறையினர் சோனு சூட் இல்லம் மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதோடு 20 கோடி ரூபாய் அளவுக்கு சோனு சூட் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு