Published:Updated:

முன்னாள் காதலர்கள் இருவரையும் திருமண வரவேற்புக்கு அழைத்த நடிகை கத்ரீனா கைஃப்!

கத்ரீனா கைஃப்-விக்கி தம்பதி
News
கத்ரீனா கைஃப்-விக்கி தம்பதி

வரும் 20-ம் தேதி நடக்க இருக்கும் திருமண வரவேற்புக்கு தனது முன்னாள் காதலர்கள் சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூருக்கு கத்ரீனா கைஃப் அழைப்பு விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிற்கும் அவரது காதலன் விக்கி கெளஷலுக்கும் கடந்த 9-ம் தேதி ராஜஸ்தானில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே கத்ரீனா அழைப்பு விடுத்திருந்தார். முன்னாள் காதலர்கள் சல்மான்கான், ரன்பீர் கபூர் போன்றோருக்கு அழைப்பு விடுக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு மும்பையில் திருமண வரவேற்பு நடத்த கத்ரீனா கைஃப் முடிவு செய்து இருந்தார். அதில் தனது திருமணத்தில் பங்கேற்க முடியாதவர்களை அழைக்க திட்டமிட்டு இருந்தார்.

கணவர் விக்கியுடன் கத்ரீனா கைஃப்
கணவர் விக்கியுடன் கத்ரீனா கைஃப்

இந்நிலையில் கத்ரீனா கைஃப் தனது திருமண வரவேற்பை வரும் 20ம் தேதி மும்பையில் உள்ள ஜெடபிள்யு மேரியட் நட்சத்திர ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட ஏதுவாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை முன்கூட்டியே முடிக்க கத்ரீனா கைஃப்-விக்கி ஜோடி முடிவு செய்துள்ளனர். இத்திருமண வரவேற்புக்கு சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆமிர் கான், ஷாருக்கான், அமிதாப்பச்சன் ஆகியோருக்கு ஏற்கனவே கத்ரீனா அழைப்பிதழை அனுப்பி இருக்கிறார். எஞ்சிய பாலிவுட் பிரமுகர்களுக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. முன்கூட்டியே அழைப்பிதழ் அனுப்புவதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரத்தை ஒதுக்கி வைக்க முடியும் என்று கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று புதிதாக பரவி வருவதால் திருமண வரவேற்புக்கு வரும் அனைவரும் கொரோனா சோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்று விருந்தினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதுமண ஜோடி மும்பை திரும்பும் முன்பாக குறுகிய காலத்திற்கு தேனிலவு சென்றுள்ளனர். ஜனவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு இருவரும் படப்பிடிப்புக்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். கத்ரீனா நடிகர் சல்மான்கானுடன் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். கத்ரீனா இல்லாத காரணத்தால் சல்மான்கான் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz