Published:Updated:

பாலிவுட் நடிகரின் மகளைத் திருமணம் செய்யும் கே.எல்.ராகுல்; தென்னிந்திய முறைப்படி வாழை இலை விருந்து!

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
News
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இன்று மாலை பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

பாலிவுட் நடிகரின் மகளைத் திருமணம் செய்யும் கே.எல்.ராகுல்; தென்னிந்திய முறைப்படி வாழை இலை விருந்து!

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் இன்று மாலை பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியைத் திருமணம் செய்து கொள்கிறார்.

Published:Updated:
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
News
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வந்தன. புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை திருமண சடங்குகள் தொடங்கின. நேற்று இரவு இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பாலிவுட் நடிகர் கிருஷ்ணா ஷெராப் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணிக்குத் திருமணம் நடைபெறுகிறது.

மகள் அதியா ஷெட்டியுடன் சுனில் ஷெட்டி
மகள் அதியா ஷெட்டியுடன் சுனில் ஷெட்டி
திருமணத்திற்கு பாலிவுட்டைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாக்கி ஷெராப், சல்மான் கான், அக்‌ஷய் குமார், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் நடைபெறும் பண்ணை வீடு முழுமையாக அலங்கரிக்கப்ப்பட்டு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்கள் என்று சுனில் ஷெட்டி நேற்றே அறிவித்திருந்தார்.

திருமணத்திற்கு நேற்றே வந்த விருந்தினர்கள் பண்ணை வீட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருமணத்தில் தென்னிந்திய முறைப்படி வாழை இலையில் சாப்பாடு வழங்கப்படும் என்று சுனில் ஷெட்டி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கண்டாலாவில் திருமணம் நடப்பதால் மும்பையிலும் திருமண பார்ட்டி ஒன்றுக்கு சுனில் ஷெட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி

இதில் பாலிவுட் மற்றும் விளையாட்டுத்துறையில் இருக்கும் 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதியா - கே.எல்.ராகுல் கடந்த 2020ம் ஆண்டு தங்களுக்கு இடையே இருக்கும் நட்பை இன்ஸ்டாகிராம் மூலம் வெளியுலகத்திற்கு அறிவித்தனர். இருவருக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் இவர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தனர். அதுவே நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

வாழ்த்துகள் கே.எல்.ராகுல் - அதியா!