Published:Updated:

கோலிவுட் - `அறுசுவை உணவு'; பாலிவுட் - `பீட்சா'; `வலிமை' போனி கபூர் சொல்லும் வசூல் சீக்ரெட்!

போனி கபூர்

சப்பாத்தி, சோறு, பருப்பு கலந்த சாப்பாடு தென்னிந்திய சினிமா என்று வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் - `அறுசுவை உணவு'; பாலிவுட் - `பீட்சா'; `வலிமை' போனி கபூர் சொல்லும் வசூல் சீக்ரெட்!

சப்பாத்தி, சோறு, பருப்பு கலந்த சாப்பாடு தென்னிந்திய சினிமா என்று வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
போனி கபூர்

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் வெளியாகி அதன் வசூல் எவ்வளவு என்பது குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. தென்னிந்திய படங்கள் அதிக அளவில் வசூலில் சாதனை படைத்து வருவது குறித்து வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "தென்னிந்திய படங்கள் பெரும்பாலும் இந்தியாவிற்கு தக்கபடி தயாரிக்கப்படுகிறது. எனவேதான் தென்னிந்திய படங்களை பாலிவுட்டில் டப்பிங் செய்தாலும் வெற்றி பெறுகிறது. தென்னிந்திய படங்கள் குடும்பம், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்து தயாரிக்கப்படுகிறது. இன்றைக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆர்டர் செய்தால் கிடைக்கும் கே.எஃப்.சி, மெக்டொனால்டு, பீட்சா போன்று படங்களைக் கொடுக்கிறார்கள்.

அஜித், போனி கபூர்
அஜித், போனி கபூர்

ஆனால் தென்னிந்தியாவில் சப்பாத்தி, சோறு, பருப்பு, கூட்டு, சிக்கன் என அனைத்தும் கலந்த கலவையாக கொடுக்கின்றனர். பார்வையாளர்கள் படத்தில் அனைத்தும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். தென்னிந்திய இயக்குநர்கள் அதனைச் சரியாகச் செய்கின்றனர். எனவேதான் நான் முதலில் தென்னிந்திய படங்களை டப்பிங் செய்து வெளியிட்டுவிட்டு தென்னிந்திய படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன். தென்னிந்திய படங்களின் டிவி உரிமை கூட 25 கோடி வரை செல்கிறது. ஆனால் பாலிவுட் படங்களுக்கு அது போன்று கிடைப்பதில்லை" என்று தெரிவித்தார். போனி கபூர், இயக்குனர் வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது படத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். இதற்கு முன்பு நேர்கொண்ட பார்வையில் சேர்ந்து பணியாற்றினர். அஜித் குமாரை வைத்து போனி கபூர் மேலும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism