Published:Updated:

மொபைல், லேப்டாப்பில் 119 ஆபாச வீடியோக்கள்... ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ய பிளான்போட்ட ராஜ் குந்த்ரா!

ராஜ் குந்த்ரா
News
ராஜ் குந்த்ரா

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்கில் 119 ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Published:Updated:

மொபைல், லேப்டாப்பில் 119 ஆபாச வீடியோக்கள்... ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ய பிளான்போட்ட ராஜ் குந்த்ரா!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்கில் 119 ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ் குந்த்ரா
News
ராஜ் குந்த்ரா

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வளர்ந்துவரும் நடிகைகளுக்கு பணத்தாசை காட்டி ஆபாச வீடியோ எடுத்து மொபைல் ஆப்களில் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை 19ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளி ரேயான் என்பவரும் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஆபாச படங்கள் எடுத்தது தொடர்பாக இந்தி பட நடிகை கெஹ்னா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் 15,000 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜ் குந்த்ராவும் அவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்ட ரேயானும் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட குந்த்ரா
கைது செய்யப்பட்ட குந்த்ரா

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கணவரின் ஜாமீன் குறித்து ஷில்பா ஷெட்டி சமூக வலைத்தளத்தில் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்து வெளியிட்ட தகவலில் 'மோசமான புயலுக்கு பிறகு அழகான விஷயங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் ராஜ் குந்த்ராவிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன், லேப்டாப், ஹார்டு டிஸ்க் போன்றவற்றில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வீடியோக்களை ராஜ் குந்த்ரா ரூ.9 கோடிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்குள் பறிமுதல் செய்துவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். ராஜ் குந்த்ரா ஹாட்ஷாட் என்ற மொபைல் ஆப் மூலம் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்தார். அதுவும் கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்த துணை நடிகைகளை பயன்படுத்தி இக்காரியத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.