Published:Updated:

"சல்மான் கான் எனது நிலத்தை ஆக்கிரமிக்கிறார்"- லைவ்வில் குற்றம் சுமத்திய நபர்! பின்னணி என்ன?

சல்மான் கான்

நடிகர் சல்மான்கான் எனது நிலத்தை குறைந்த விலைக்கு வாங்க முயற்சிப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் குற்றம் சாட்டியுள்ளார்.

"சல்மான் கான் எனது நிலத்தை ஆக்கிரமிக்கிறார்"- லைவ்வில் குற்றம் சுமத்திய நபர்! பின்னணி என்ன?

நடிகர் சல்மான்கான் எனது நிலத்தை குறைந்த விலைக்கு வாங்க முயற்சிப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் குற்றம் சாட்டியுள்ளார்.

Published:Updated:
சல்மான் கான்

நடிகர் சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்தில் பண்ணை வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு சல்மான்கான் அடிக்கடி சென்று ஓய்வு எடுப்பது வழக்கம். அதோடு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளையும் இந்த பண்ணை வீட்டில்தான் கொண்டாடுவார். சமீபத்தில் இந்த பண்ணை வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட சென்ற போது சல்மான்கானை பாம்பு ஒன்று கடித்துவிட்டது. சல்மான் கான் நிலத்திற்கு அருகில் வெளிநாட்டு வாழ் இந்தியர் கேதன் காக்காட் என்பவருக்கு நிலம் இருக்கிறது. சல்மான்கான் நிலத்தை தாண்டித்தான் கேதன் நிலத்திற்கு செல்லவேண்டும். சல்மான் கான் திடீரென கேதன் நிலத்திற்கு செல்வதற்கான வழியை அடைத்துவிட்டார். அதிலிருந்து இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.

சல்மான் கான்
சல்மான் கான்

கேதன் நடிகர் சல்மான் கான் குறித்து பேஸ்புக் லைவில் கடுமையான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் சல்மான்கான் பண்ணை வீட்டில் குழந்தை கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இவை பின்னர் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த யூடியூப் பேட்டியை அகற்றவேண்டும் என்றும், கேதனுக்கு எதிராக அவதூறு வழக்கும் சல்மான் கான் தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கேதன் தரப்பில் வழக்கறிஞர் அபா சிங் ஆஜரானார். தனது மனுதாரரின் நிலத்தை சல்மான்கான் குறைந்த விலைக்கு வாங்க விரும்புகிறார்.

அதற்கு அவதூறு வழக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார். நிலத்திற்காக போராடுவதை கைவிட வேண்டும் என்பதற்காக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எனது மனுதாரர் யூடியூப்பில் தனது அதிருப்தியையும், உண்மையையும்தான் தெரிவித்தார். இதில் அவதூறு என்ன இருக்கிறது. சல்மான்கான் தான் எனது மனுதாரரை மிகவும் மோசமாக அவமதித்துவிட்டார். இதனால் எனது மனுதாரர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறார்" என்று தெரிவித்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.