Published:Updated:

`இந்த பயணமும் முடிவுக்கு வந்தது' தேர்தல் கமிஷன் நடவடிக்கை குறித்து நடிகர் சோனு சூட் ட்வீட்!

சோனு சூட்
News
சோனு சூட்

நடிகர் சோனு சூட்டிற்கு வழங்கப்பட்ட பஞ்சாப்பின் அடையாள சின்ன அந்தஸ்தை தேர்தல் கமிஷன் திரும்பப் பெற்றுள்ளது.

நடிகர் சோனுசூட் கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுத்து நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். ரயில்கள் அடியோடு நிறுத்தப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல சோனுசூட் வாகன வசதி செய்து கொடுத்தார். அவரின் தன்னலமற்ற சேவையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் சோனு சூட்டிற்கு `பஞ்சாப்பின் அடையாளம் சின்னம்' என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவித்தது. சோனுசூட் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த அடையாளம் வழங்கப்பட்டது. ஆனால் வரும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சோனு சூட் சகோதரி போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதோடு சோனு சூட்டும் கடந்த நவம்பர் மாதம் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங்கை சந்தித்துப் பேசினார். இதனால் சோனுசூட் அரசியலில் நுழைவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அரசியலில் நுழையும் திட்டம் எதுவும் இல்லை என்று சோனு சூட் தெரிவித்திருந்தார்.

சோனு சூட்
சோனு சூட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது புதிய திருப்பமாக தேர்தல் கமிஷன் சோனு சூட்டிற்கு வழங்கியிருந்த பஞ்சாப்பின் அடையாள சின்னம் என்ற அந்தஸ்த்தை ரத்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சோனு சூட் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ``மற்ற எல்லா நல்ல பணிகளைப்போன்று, இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. பஞ்சாப்பின் அடையாள சின்னம் என்ற அந்தஸ்தில் இருந்து நானே விலகிக்கொள்கிறேன். எனது உறவினர்கள் தேர்தலில் போட்டியிடுவதால் நானும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் தனது சகோதரி மால்விகா அரசியலில் ஈடுபடப்போகிறார் என்று சோனு சூட் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தை சேர்ந்த சோனுசூட் டெல்லி அரசின் விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார்.