கொரோனாவுக்கு முன்புவரை நம் வரவு, செலவு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளுக்குப் பிறகு, ஒவ்வொருவரின் நிதிநிலையும் ‘வரவு எட்டணா; செலவு பத்தணா’ என்ற கணக்கில்தான் உள்ளது.

ஆகையால், வரும் காலங்களில் அனைவரும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உங்கள் வருமானத்துக்கு ஏற்றபடி எளிமையாக பட்ஜெட் போடுவது எப்படி என்று குடும்ப பட்ஜெட் டிப்ஸ் தருகிறார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

“பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பழக்கம் அநாவசிய செலவுகளைக் குறைப்பதுடன், வரவு, செலவுக் கணக்கை ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரவும் உதவுகிறது. ‘குடும்ப பட்ஜெட்’ போடுவது சிக்கலான விஷயமெல்லாம் இல்லை. குடும்பச் செலவுகள் குறித்து நன்கு தெரிந்த யார் வேண்டுமானாலும் போடலாம். கூடியவரை குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் பட்ஜெட் போடுவது குடும்ப நிதிநிலையை அறிந்துகொள்ளவும் எதிர்காலத்தில் அவர்கள் பட்ஜெட் போட்டு வாழவும் பயன்படும்.

ஒவ்வொரு நாளுக்கும் பட்ஜெட் போட்டு செலவு செய்வதுதான் சிறந்தது. ஆனால், அது அனைவராலும் முடியாது என்பதால், ஒரு மாதத்துக்கான பட்ஜெட்டை அந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே தயார் செய்து வைத்துக்கொள்ளலாம்.

இந்தப் பட்ஜெட்டை பெரும்பான்மையான ஐந்து தலைப்புகளின்கீழ் வரையறுத்துக்கொள்ளலாம்.

1. வீட்டு வாடகை அல்லது இ.எம்.ஐ

இதன்கீழ் வீட்டுக்குக் கொடுக்க வேண்டிய வாடகையையோ, மாதாந்தரப் பணம் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ போன்ற கடன்களுக்கான பணத்தையோ தனியே பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2. பயன்பாட்டுச் செலவுகள்

ஒரு மாதத்துக்கு நாம் பயன்படுத்தக்கூடிய மின்சாரக் கட்டணத்துக்கன தொகை, காஸ் சிலிண்டருக்கான தொகை, தொலைக்காட்சிக்கான சந்தா, வீட்டிலிருக்கும் மொபைல், லேப்டாப் போன்ற கேஜெட்டுகள் மற்றும் வாகனங்களின் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்கான தொகை எல்லாம் அடங்கும்.

3. மளிகை மற்றும் உணவுப் பொருள்கள்

ஒரு மாதத்துக்கு உங்கள் குடும்பத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களுக்கான தொகையை இதன்கீழ் தனியே பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

4. மருத்துவச் செலவு

உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவைப்படும் மருந்து, மாத்திரைகளுக்கான பணம், மருத்துவ மனைக்குச் சென்று பரிசோதனை செய்யவும், பிற மருத்துவத் தேவைகளுக்காகவும் தேவைப்படும் தொகையையும் கணக்கிட்டு மருத்துவச் செலவுக்கென்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5. சேமிப்புகள், காப்பீடுகள்

காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியம் மற்றும் எதிர்காலத் தேவைக்காக மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்பவராக இருந்தால் அதற்கான தொகையை இதன்கீழ் பிரித்துக்கொள்ளலாம்.

நான் இப்படிப் பிரித்துச் சொல்லியிருப்பது ஓர் உதாரணத்துக்காக மட்டுமே. இவற்றைத் தவிர்த்து உங்கள் குடும்பத்தின் ஒரு மாத வருமானம் மற்றும் தேவைக்கான அடிப்படையில் இந்தத் தலைப்புகளை உங்கள் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றியோ, மேலும் சில தலைப்புகளைச் சேர்த்தோ ஒரு மாதத்துக்கான பட்ஜெட்டைத் தயார் செய்து கொள்ளலாம். நீங்கள் உருவாக்கும் பட்ஜெட் தலைப்புகளுக்குக் கீழ் அதற்குத் தேவையான பணத்தைத் தனியே பிரித்து வைத்துவிட வேண்டும். செலவுகள் வரும்போது அது எந்தத் தலைப்புக்குக் கீழ் உள்ள செலவு என்று கண்டறிந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகையிலிருந்து மட்டுமே பணத்தை எடுத்துச் செலவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் செய்யும் செலவை ஒரு நோட்டில் கைப்பட எழுதி வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. இதை மாதக் கடைசியில் பரிசீலனை செய்து எதற்கெல்லாம் தேவையற்ற செலவுகள் செய்தோம் என்பதைக் கண்டறிந்து வரும் மாதங்களில் அந்த வீண் செலவுகளைக் குறைக்க உதவும்” என்கிறார் லலிதா ஜெயபாலன்.

பட்ஜெட்டை சரியாகப் போட்டு, குடும்பத்தைக் குறையில்லாமல் நடத்த நினைப்பவர்கள் இவர் சொல்லும் ஆலோசனையின்படி நடக்கலாமே!

‘‘20 வருஷமாக பட்ஜெட் போட்டு செலவு செய்றேன்!’’

காந்திமதி, வேளச்சேரி, சென்னை.

‘‘ஒரு மாசத்துக்கு என்னோட குடும்ப வருமானம் 25,000 ரூபாய். உணவுப்பொருள்கள், பலசரக்கு சாமான்களுக்கு தனியாக 5,000 ரூபாயை எடுத்து வச்சிடுவேன். மின்சாரக் கட்டணம் 3,000 ரூபாய் வரும். டெலிபோன், டிவி கேபிள் கட்டணம் எல்லாம் சேர்த்து 2,000 ரூபாய் வந்துடும். லோன், இ.எம்.ஐ எல்லாம்போக மீதமாகும் பணத்தை என் மகனோட படிப்பு செலவுக்காகச் சேமிக்கிறேன்.

மாசம் ஆரம்பிக்கும்போதே அந்த மாசத்துல என்னென்ன செலவு செய்யணும், எந்த செலவைக் குறைக்கணும்னு எழுதி வச்சிடுவேன். 5 ரூபாய், 10 ரூபாய்னு தினமும் நான் செய்யுற செலவைக் கூட நோட்டுல குறிச்சு வைப்பேன். இதுமாதிரி பட்ஜெட் போட்டு செலவு செய்யுறதாலதான் குறைந்த வருமானதுல என் குடும்பத்தோட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுது.”

‘‘50% முதலீடு... 50% குடும்பச் செலவு!’’

ராகவி, திருச்சி

‘‘எங்க வீட்டுல அம்மாதான் பட்ஜெட் எல்லாம் போட்டு செலவு செய்வாங்க. ஆனா, உடல்நிலை சரியில்லாம அவங்க இறந்துட்டாங்க. இப்போ நானும் அப்பாவும் மட்டும்தான். அப்பா அவரோட அலுவலக வேலையில பிஸியா இருக்குறதால என்னோட படிப்போட சேர்த்து வீட்டு செலவுக்கான பட்ஜெட் மாதிரியான விஷயங்களை நானே பார்த்துக்குறேன்.

ஒரு மாசத்துக்கான எங்க குடும்ப வருமானம் 35,000. இதுல 18,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம். மீதமுள்ள 17,000 ரூபாயைத்தான் உணவு, உடைகள் மாதிரியான தேவைகளுக்குச் செலவு செய்வோம். முதல்ல உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், மின்சாரக் கட்டணம், உடைகள், கேஜெட்டுக்கான செலவு, மாத்திரை செலவு எனத் தனித்தனியே பணத்தை பிரித்து ஒரு சின்ன பிளாஸ்டிக் கவரில் வச்சிடுவோம்.

மளிகைப் பொருள்கள் வாங்கணும்னா அதற்கென பிரித்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து அந்த பட்ஜெட்டுக்குள்ள வாங்கிப்போம். அந்த பட்ஜெட்டுக்கு மேல செலவு செய்ய மாட்டோம். எங்களுக்கு பட்ஜெட் போடுறதுல சந்தேகம் ஏற்பட்டாலோ, ஏதாவது நிதி ஆலோசனைகள் தேவைப்பட்டாலோ எங்களோட குடும்ப நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கம் வழி காட்டுவார்’’ என்றார் ராகவி.

கொரோனாவுக்கு பின்னான புதிய இயல்பு (நியூ நார்மல்) வாழ்க்கைக்கு முகக்கவசம், சானிடைசர் போல பட்ஜெட்டும் முக்கியம். இதுவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்துகொண்டிருக்கலாம். ஆனால், இனி பட்ஜெட ்போட்டு செலவு செய்யத் தொடங்கினால், இன்னும் நிறைவான வாழ்க்கையை வாழலாம்!