பிரீமியம் ஸ்டோரி
கடன்களுக்கான இ.எம்.ஐ கட்டுவதில் காலதாமதம் வேண்டாம். தாமதமாகக் கட்டினால் வட்டி அதிகரித்து கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்... கவனம்!
இக்கணம் தேவை சிக்கனம்!

கொரோனாவினால் உலகமே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது தனிநபர்களை அதிக அளவில் பாதித்துக்கொண்டிருக்கும் நிலையில், இருக்கும் கையிருப்பை எவ்வளவு சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார் பொருளாதார நிபுணர் சித்ரா நாகப்பன்.

  • அடுத்த மூன்று மாதங்களுக்கான பட்ஜெட்டை இப்போதே திட்டமிடுங்கள். கடந்த மாத பட்ஜெட்டிலிருந்து எவற்றையெல்லாம் குறைக்க முடியும் என்பதை முதலில் பாருங்கள்.

  • வேலைக்குச் செல்லாமல் இருப்பதால் மீதமாகும் பயணச் செலவுத் தொகையை, அதிகமாகும் மின்சாரக் கட்டணத்துக்குச் செலுத்தலாம்.

  • கடன்களுக்கான இ.எம்.ஐ கட்டுவதில் காலதாமதம் வேண்டாம். தாமதமாகக் கட்டினால் வட்டி அதிகரித்து, கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்... கவனம்!

  • வருமானம் குறைந்துள்ளவர்கள் அவசர கால சேமிப்பு / லிக்விட் ஃபண்ட் /ஷேரில் இன்வெஸ்ட் செய்த தொகை / பி.எஃப் தொகையை எடுத்து பயன்படுத்தலாம். இந்தச் சூழ்நிலையில் முதலீட்டைப் பற்றி யோசிக்காதீர்கள். அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தடுமாறுவதால் முதலீட்டுக்கான நேரம் இல்லை இது.

பட்ஜெட்
பட்ஜெட்
  • ஒருவேளை தேவைக்கும் அதிகமான தொகை கையிருப்பில் இருந்தால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

  • வருமானம் குறைந்தாலும் கல்விக் கட்டணத்தை ஜூன் மாதம் செலுத்த வேண்டியிருக்கும். அந்தத் தொகையை முன்கூட்டியே ஒதுக்கியவர்களுக்குக் கவலை இல்லை. அப்படி ஒதுக்காதவர்கள், எதிர்காலத் திட்டத்துக்கு என எடுத்து வைத்திருக்கும் பணத்தை இதற்குப் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் வராமல் இருக்க, உங்கள் குழந்தையின் அடுத்த வருட கல்விக்கட்டணத்தைத் தோராயமாகக் கணக்கிட்டு, அந்தத் தொகையை 12 ஆகப் பிரித்து, அதை ஒவ்வொரு மாதமும் தனியே எடுத்து வையுங்கள். அப்படி சேமித்ததை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்து வைக்கலாம். உயர்கல்வி பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் எனில், துணிந்து கல்விக்கடன் பெறலாம். அதற்கு வட்டி விகிதம் குறைவு என்பதோடு, அதை தாங்கள்தாம் கட்டியாக வேண்டும் என்ற பொறுப்பும் குழந்தைகளுக்கு வரும்.

  • சிக்கனம், தேவைப்படும்போது மட்டும் அவசியமான பொருள்களை வாங்குவது போன்ற நடவடிக்கைகளே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து பொருளாதார ரீதியாக நம்மைக் காக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு