புதிய நிதியாண்டு என்றாலே புதிய சிக்கலும்தான். விலை உயர்வு, பணவீக்கம், கூடுதல் வட்டி என அரசின் திட்டங்களும், செயல்களும் அதிகரித்து வருவதால் சாமானிய மக்களும் தங்களின் வாழ்க்கையை நகர்த்துவது கேள்வி குறியாகி உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய நிதியாண்டு தொடங்குகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே எந்தெந்த பொருட்களின் விலை ஏறும் என்பதை மக்கள் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அதனடிப்படையில், ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை மார்ச் 1-ம் தேதி 105 ரூபாய் உயர்த்தப்பட்டது. 19 கிலோ LPG சிலிண்டரின் விலை இரண்டாவது முறையாக 250 ரூபாய் அதிகரித்து 2,253 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டின் துவக்கத்தில் சிலிண்டர் விலை ஏற வாய்ப்புள்ளது.
அஞ்சலக திட்டங்களுக்கான வட்டி விகிதமானது ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நேரடியாக வங்கி கணக்கிற்கோ அல்லது தபால் அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கோ அனுப்பப்படும். அதனால் பணத்தை இனி ரொக்கமாக பெற முடியாது.

இனிமேல் வருங்கால வைப்பு நிதியானது 2.5 லட்சத்துக்கும் மேல் கணக்கில் இருந்தால், அதற்கு கொடுக்கப்படும் வட்டிக்கு வரி வசூலிக்கப்படும். பட்ஜெட்டில் அறிவித்தபடி கிரிப்டோ கரன்சிக்கு இனிமேல் 30% வரி வசூலீக்கப்டும். அவசர கால மருந்துகளின் விலை பத்து சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்படும் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.