Published:Updated:

தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 300 டாஸ்மாக் கடைகளுக்கு தடை!

விகடன் விமர்சனக்குழு
தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 300 டாஸ்மாக் கடைகளுக்கு தடை!
தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 300 டாஸ்மாக் கடைகளுக்கு தடை!
தேசிய,மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 300 டாஸ்மாக் கடைகளுக்கு தடை!

சென்னை: மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சுமார் 300 டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க  தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகே மதுபான கடைகள் இருப்பதால், சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக எல்லா மாநில அரசுகளுக்கும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதுபான கடைகளை மூடிவிட்டு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் மதுபான கடை களை வைத்துக்கொள்ளும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதை மாநில அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

##~~##
இந்நிலையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி,கடந்த ஓர் ஆண்டில் தமிழக தேசிய மற்றும் மாநில  நெடுஞ்சாலை அருகே இருந்த  சுமார் 500 கடைகளில் 200 கடைகளுக்குமேல் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 300 கடைகளையும் படிப்படியாக இடமாற்றம் செய்யும் பணியை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
சில மாதங்களில் தமிழக நெடுஞ்சாலை ஓர கடைகள் அனைத்தையும் வேறு இடங்களுக்கு  மாற்றப்பட்டு விடும் என்று டாஸ்மாக் அலுவலக வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.