Published:Updated:

விஸ்வரூபம் விவகாரம்: அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

விஸ்வரூபம் விவகாரம்: அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
விஸ்வரூபம் விவகாரம்: அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
விஸ்வரூபம் விவகாரம்: அவதூறு வழக்கில் கருணாநிதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: விஸ்வரூபம் பட விவகாரம் மற்றும் அமைச்சர் வைத்தியலிங்கம் பற்றி  விமர்சனம் செய்தது தொடர்பான 2 அவதூறு வழக்குகளில், வருகிற ஏப்ரல் 29 ஆம்  தேதியன்று கருணாநிதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஸ்வரூபம் படத்தின் சர்ச்சையின்போது முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி திமுக  தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் முதல்வர் பற்றி அவதூறாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக, கருணாநிதி மீது  சென்னை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் வழக்கு  தொடரப்பட்டது.

மேலும் கருணாநிதியின் அறிக்கையை வெளியிட்ட 'தி இந்து' ஆங்கில நாளேடு மீதும்  வழக்கு தொடரப்பட்டது.

##~~##
இதேபோல் அமைச்சர் வைத்தியலிங்கம் பற்றி அவதூறான தகவல்களை வெளியிட்டதாக  கருணாநிதி மீதும், அதை வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல்வம் மீதும் மற்றொரு  வழக்கு தொடரப்பட்டது.
இந்த இரு வழக்குகளும்,சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  இந்த இரு வழக்குகளிலும் கருணாநிதி, வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதியன்று  நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிபதி பொன்.கலையரசன் உத்தரவிட்டார்.
அதேபோல் அன்றைய தினம் முரசொலி ஆசிரியர் செல்வம், 'தி இந்து' நாளிதழ்  வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் ஆகியோரும் ஆஜர் ஆக வேண்டும் என்றும் நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.