Published:Updated:

நெடுஞ்சாலை டாஸ்மாக்: தமிழக அரசின் மனு தள்ளுபடி !

 நெடுஞ்சாலை டாஸ்மாக்: தமிழக அரசின் மனு தள்ளுபடி !
நெடுஞ்சாலை டாஸ்மாக்: தமிழக அரசின் மனு தள்ளுபடி !
 நெடுஞ்சாலை டாஸ்மாக்: தமிழக அரசின் மனு தள்ளுபடி !

சென்னை: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை நீதிமன்ற உத்தரவுபடி மார்ச் 31ஆம் தேதிக்குகள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே. பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதாலேயே ஏராளமான விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

ஆகவே, இதுபோன்ற சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் பாலு கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு, நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குகள் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

##~~##
இந்த நிலையில், நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற 6 மாதம் அவகாசம் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சவுண்டய்யா சென்னை உயர் நீதிமன்றதில் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் அமர்வு, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற அவகாசம் தரமுடியாது என்றும் நீதிமன்ற உத்தரவு படி மார்ச் 31ஆம் தேதிக்குகள் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.