Published:Updated:

மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் நூதன போராட்டம்! (படங்கள்)

மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் நூதன போராட்டம்! (படங்கள்)
மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் நூதன போராட்டம்! (படங்கள்)

நெல்லை: மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்புரம் கிராம மக்கள் கையில் கருப்பு துணியை கட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் நூதன போராட்டம்! (படங்கள்)

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13 வார்டுக்கு உட்பட்ட அகஸ்தியர்புரம் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் லட்சுமி என்பவர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவருக்கு சொந்தமான இடத்தில் இந்த கடையை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பகுதியில் பீடி சுற்றும் தொழில் செய்யும் பெண்கள் அதிகமாக வசிப்பதால் தொழில்ரீதியாக பீடிக்கடைக்கு சென்று திரும்பும் வழியில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குமுறுகின்றனர்.
 

மதுக்கடைக்கு எதிராக கிராம மக்கள் நூதன போராட்டம்! (படங்கள்)

இதுவரையிலும் தங்கள் கிராமத்தில் எந்த அச்சமும் இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு மதுக்கடை வந்தால், இயல்பு வாழ்க்கை பறிபோய்விடும் ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் மக்கள், இந்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தியிடம் மனு கொடுத்தனர்.

##~~##
முன்னதாக, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவர்கள் கைகளை கருப்பு துணியால் கட்டியபடி வந்தனர். அத்துடன், ‘வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம்’ என அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை கலைந்து போக செய்தனர்.
ஆண்டனிராஜ்


படங்கள்:
எல்.ராஜேந்திரன்