Published:Updated:

போதையில் டாஸ்மாக்கை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது

விகடன் விமர்சனக்குழு
போதையில் டாஸ்மாக்கை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது
போதையில் டாஸ்மாக்கை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது
போதையில் டாஸ்மாக்கை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் அருகே குடிபோதையில் டாஸ்மாக் கடையை சூறையாடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைது  செய்யப்பட்டனர். சட்டத்தை மதிக்காத சட்டக்கல்லூரி மாணவர்கள் இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் தமது நண்பர் இல்ல விழாவிற்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வந்திருக்கிறார்கள். நேற்று காலை பத்துமணிக்கு குடவாசல் ஓகை எனும் இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே போதையில் இருந்த எட்டு மாணவர்கள், நூறு ரூபாயை கொடுத்து ஒரு ஆஃப் கொடு என சேல்ஸ்மேன் ராமதாஸிடம் கேட்டிக்கிறார்கள். நூறு ரூபாய்க்கு தரமுடியாது என சொல்லியிருக்கிறார் சேல்ஸ்மேன். நாங்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள், கொடுக்காவிடில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என மிரட்டியிருக்கிறார்கள்.

பயந்து போன ராமதாஸ் சரக்கை கொடுத்து அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு தான் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. மதியம் இரண்டரை மணிக்கு மீண்டும் அதே குரூப் வந்திருக்கிறது. பீர் எவ்வளவு என கேட்க, விலையை சொல்லியிருக்கிறார் சேல்ஸ்மேன்.

நாங்கள் அவ்வளவு பணம் தரமுடியாது. இருக்கிறதை வாங்கிக்கிட்டு பீரை கொடு என்றிருக்கிறார்கள். உஷாரான சேல்ஸ்மேன், தரமுடியாது என மறுத்திருக்கிறார். இதில் கடுப்பான மாணவர்கள் அருகில் கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்ததில் சேல்ஸ்மேன் ராமதாஸு க்கு நெற்றி, வாயில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் தகராறு செய்த மாணவர்களை நைய புடைத்து காவல்துறையிடம் பிடித்து கொடுத்திருக்கிறார்கள். தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் தீபங்கர், பெருமாள், ஷியாம் சுந்தர், சாக்ரடீஸ், சேதுபதி, விஜயகுமார், தினேஷ், வெங்கடேசன் ஆகிய எட்டுபேர் மீதும், கொலைமுயற்சி, பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது குடவாசல் காவல்துறை.

கைதான எட்டுபேரில் தீபங்கருக்கு 17 வயது தான் ஆகிறதாம். எனவே அவரை மட்டும் தஞ்சாவூரில் இருக்கும் சிறுவர் சீர்சிருத்த பள்ளிக்கு அனுப்பிவிட்டு மற்றவர்களை கடலூர் சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது நீதிமன்றம்.

சட்டம் படிக்கும் மாணவர்களே இப்படி சட்டத்தை மதிக்கா விடில்?

வீ.மாணிக்கவாசகம்