Published:Updated:

டாஸ்மாக்கை அகற்றாத தமிழக அரசு மீது அவதூறு வழக்கு!

டாஸ்மாக்கை அகற்றாத தமிழக அரசு மீது அவதூறு வழக்கு!
டாஸ்மாக்கை அகற்றாத தமிழக அரசு மீது அவதூறு வழக்கு!
டாஸ்மாக்கை அகற்றாத தமிழக அரசு மீது அவதூறு வழக்கு!

சென்னை: நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றாத தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மார்ச் 31ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு இடமாற்றம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

##~~##
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக கூறி தமிழக அரசு மீது இன்று சென்னை உயர் நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில், நீதிமன்ற உத்தரவு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் தமிழக அரசு மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.