டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் விதித்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், கொலைகள் அதிகமாக நடப்பதாகவும், இதனால் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்ச் 31ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
##~~## |