Published:Updated:

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் தண்டனைக்குரியது என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள் தொடுத்த பொதுநல வழக்கில், `ஏற்கெனவே இருக்கின்ற இந்தியச் சட்டப்பிரிவு 375-ன் படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு மட்டும் தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் திருநங்கைகளையும் இணைத்து அந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், 'திருநங்கைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்குத் தண்டனை கிடைக்கப்பட வேண்டும்' என்றும் அந்தப் பொதுநல வழக்கில் கோரப்பட்டுள்ளது. 

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டப்பிரிவு எண் 375ஐ பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் பொதுவானதாக மாற்ற நாடளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை, திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் தண்டனைக்குரியது என உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் அறிவித்துள்ளது. மேலும், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில், நாடாளுமன்றத்தைதான் அணுக வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தலைமை அமர்வு தீர்ப்பு கூறியிருக்கிறது.