சந்தைக்கு பக்கத்தில் சரக்கு! புதிதாக முளைத்த டாஸ்மாக் கடையை எதிர்த்து உண்ணாவிரதம்!

நாகர்கோவில்: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 839 மதுபான கடைகளை மூட ஐந்து மாதம் அவகாசம் கேட்கிறது தமிழக அரசு. இந்த நிலையில், நாகர்கோவிலில் கணேசபுரம் பகுதியில் புதிதாக திறக்கப்படவிருக்கும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பகுதிவாசிகள் கடை வாசலிலேயே உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் உள்ளது கணேசபுரம்.காய்கறி, மீன் சந்தை, ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி, மருத்துவமனைகள் என பொதுமக்கள் அதிகமாக கூடும் இந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை இன்று திறப்பதாக இருந்தது.
அண்மையில் உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற சொல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலுமே சாலையோர டாஸ்மாக் கடைகளை, ஊருக்குள் மாற்றிக் கொண்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதற்கே எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதிதாக கணேசபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை வருவதை அறிந்த ஏரியாவாசிகள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
##~~## |
படம்: ரா.ராம்குமார்