Published:Updated:

தோழிகளுடன் குளிக்கச் சென்ற சிறுமிக்கு கஞ்சா கும்பலால் நடந்த சோகம்!

தோழிகளுடன் குளிக்கச் சென்ற சிறுமிக்கு கஞ்சா கும்பலால் நடந்த சோகம்!
தோழிகளுடன் குளிக்கச் சென்ற சிறுமிக்கு கஞ்சா கும்பலால் நடந்த சோகம்!

தோழிகளுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமியை கஞ்சா கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள டிரைனிங் சாலையைச் சேர்ந்தவர் மகேஷ்வரன். இவர் மீது கஞ்சா மற்றும் கடத்தல், வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. குறிப்பாகத் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அப்பகுதி இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ஏற்பட்ட மோதலில், மகேஷ்வரன், சுரேஷ் மற்றும் அவரின் அண்ணனையும் அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்தது. நிலைமை இப்படியிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஶ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதி கோயில் திருவிழாவில், ரவுடி மகேஷ்வரன் கும்பலுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அடுத்த நாள், கஞ்சா போதையில் இருந்த மகேஷ்வரன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்துகொண்டு இருவர் மீது கொடூரத் தாக்குதல்

நடத்தினார். மேலும் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி இரவு, ரவுடி சந்துரு உடன் மகேஷ்வரன் மற்றும் சபரி ஆகியோருடன் பட்டாக் கத்தியை எடுத்துக்கொண்டு ஶ்ரீரங்கம் வீதிகளில் உள்ள கடைகளை அடித்து உடைத்ததோடு, பூ வியாபாரி கதிர்வேல், ஹோட்டல் அதிபர் காமராஜ் ஆகியோரை மிரட்டிப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த வழக்கில் ரவுடி சந்துரு உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்தான், ரவுடி மகேஷ்வரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பானு மற்றும் ஜோதி ஆகியோர் (பெயர் மாற்றம்) ஸ்ரீரங்கத்தை அடுத்த பஞ்சக்கரை சாலையில் உள்ள கொள்ளிடக்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த ரவுடி மகேஷ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான பால் என்கிற பாலகிருஷ்ணன், விஜய், சூர்யா உள்ளிட்டோர் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரவுடிகளிடம் சிக்கிய பானுவை ரவுடி மகேஷ்வரன் மற்றும் பாலு ஆகியோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே தப்பியோடிய ஜோதி ஊருக்குள் சென்று நடந்த விஷயத்தை அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரும் சொல்லி ஆட்களைத் திரட்டி வருவதற்குள் ரவுடி மகேஷ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதையடுத்து பலத்த படுகாயங்களுடன் கிடந்த பானுவை மீட்டப் பொதுமக்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ராமச்சந்திரன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மும்தாஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.போலீஸ் விசாரணையில் சிறுமி பானுவை மகேஷ்வரன் மற்றும் பாலு என்கிற பாலகிருஷ்ணன் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் மகேஷ்வரன் மற்றும் பாலு ஆகியோர் சிறுமி பானுவை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ரவுடி மகேஷ்வரன் மற்றும் அவரின் கூட்டாளியான பாலு என்கிற பாலகிருஷ்ணனை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.