Published:Updated:

உணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்

உணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்
உணவு தேடச் சென்ற பாகன்... எருமை கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஆற்றில் இறங்கிய யானை... நள்ளிரவில் நடந்த திக் திக்

மேற்குத்தொடர்ச்சி மலையில் சுற்றுலாத்தலமாக விளங்கும் மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கும் நிலையில், திருச்சி உய்யங்கொண்டான் ஆற்றில் இறங்கிய யானை கரையேர முடியாமல் விடிய விடியத் தவித்த சம்பவம் பெரும்  பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் திருச்சி சமயபுரம் கோயிலில் இருந்த மசினி உள்ளிட்ட யானைகளை கவனித்து வந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்றநிலையில், சுகுமார் சொந்தமாக மர அரவை மில் வைத்திருப்பதுடன், திருமண விழாக்கள் மற்றும் கோயில் விசேஷங்களுக்குத் தேவையான சாரட்டு வண்டி, குதிரைகள், யானைகள் சொந்தமாக வைத்துள்ளார்.

லக்கிமணி, ஜெயா, சுமத்ரா உள்ளிட்ட யானைகளை சுகுமாரன் வளர்த்து வருகிறார். அந்த யானைகளை கோபு மற்றும் கண்ணன் உள்ளிட்ட  பாகன்கள் பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை யானை சுமத்ராவுடன் வந்த யானைப் பாகன்கள், யானைக்கு உணவாகத் தென்னைமரத்தில் தென்னை மட்டைகள் பறிப்பதற்காக வயலூர் அருகேயுள்ள அதவத்தூர் பகுதியிலுள்ள தகரக் கொட்டகையில் யானையை நிறுத்தினர்.

அப்போது மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அந்த வழியே 15-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் சாலையைக் கடந்து சென்றன. அந்த எருமை மாடுகளைப் பார்த்த யானை சுமத்ரா மிரண்டதுடன், அருகிலிருந்த 6 அடி ஆழமுள்ள திருச்சி உய்யங்கொண்டான் ஆற்றில் தவறுதலாக இறங்கியது. ஆற்றில் இறங்கிய யானை, தண்ணீரில் இறங்கிய மகிழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கி அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்றது. திருச்சி அல்லித்துறை பாலம் வரை செல்லவே, யானைப்பாகன் கோபி என்பவர் யானையின் வாலைப் பிடித்து கரை ஏற்ற முயன்றார். ஆனால், யானையால் கரை ஏற முடியவில்லை.

இதேபோல் சுமத்ரா, மீண்டும் வந்த வழியிலேயே திருப்பி நடந்து போனது. அப்போது அங்கு எதிர் முனையிலிருந்த செடிகொடிகளை பறித்து தின்றபடி இருக்கவே, யானையால் கரையேற முடியவில்லை. இரவு நேரமானதால் யானையைக் கரையேற்ற முடியாமல் தவித்த நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் இளைஞர்கள் அங்கு கூடினர். பொதுமக்கள் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். ஆனால், யானையால் கரையேற முடியவில்லை. அதையடுத்து, யானைப்பாகன் பல்வேறு வழிகளில் யானையைக் கரை ஏற்ற முயன்றும் பலன் அளிக்காததால், தீயணைப்பு படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனால் நள்ளிரவு வரை பரபரப்பாக காணப்பட்டது. இறுதியாக நள்ளிரவு 2 மணியளவில் யானை மீட்கப்பட்டது.

யானை ஆற்றில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.