Published:Updated:

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”
பிரீமியம் ஸ்டோரி
“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

Published:Updated:
“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”
பிரீமியம் ஸ்டோரி
“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

திருப்பூர் அருகே நிகழ்ந்த அந்த அவமானகரமான சம்பவத்திலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது சேலத்தில் நிகழ்ந்துள்ள இன்னொரு சம்பவம். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா குப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ‘‘பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் சமையலர் சமைத்த சாப்பாட்டை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டுப் பட்டுரும். எங்க குலதெய்வத்துக்கு ஆகாது’’ என்று பள்ளியை முற்றுகையிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் கூச்சலிட்டதுடன், அந்தச் சமையலரை மாற்றக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

சேலம் மாவட்ட வடக்கு எல்லையில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி சமையலராக இருந்தவருக்கு குப்பன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலராக பணி உயர்வு கிடைத்தது. அங்கு இந்தத் தீண்டாமைக் கொடுமை... இது தொடர்பாக, தலைமை ஆசிரியர் உட்பட ஆறு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் தலைமறைவாக, தேவன், மகேந்திரன், சின்னத்தம்பி ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

சமையலர் ஜோதியைச் சந்தித்தபோது, ‘‘இந்தப் பள்ளியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களின் குழந்தைகள் மட்டுமே இங்கு படிக்கிறார்கள். சம்பவத்தன்று 40-க்கும் மேற்பட்டவர்கள் பைக்கில் வந்து கூச்சல் போட்டார்கள். அதிகாரிகள் சமாதானம் செய்தும் கேட்கவில்லை. வேலைக்கு வருவதற்கே பயமாக உள்ளது.’’ என்றார்.

ஜோதியின் கணவர் சிவராஜ், ‘‘நான் அ.தி.மு.க-வில் மாவட்டப் பிரதிநிதியாக உள்ளேன். கவுன்சிலராகவும், கூட்டுறவு சங்க இயக்குநராகவும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் தலைவராகவும் இருந்துள்ளேன். என் மனைவி ஜோதி சமைத்தால் தீட்டு என்று சிலர் பிரச்னை செய்வதாகக் கேள்விப்பட்டுப் பதறிப்போய் பள்ளிக்குச் சென்றேன். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு எங்கள் சமூகத்தின் பெயரைச் சொல்லி கீழ்த்தரமாகப் பேசினர். என் மனைவி சமைக்கக் கூடாது கூச்சலிட்டனர். இதை கேட்டு என் மனைவி மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார். இதற்கு மேலும் இங்கு என் மனைவி அங்கு வேலை செய்வது ஆபத்து. எனவே, மோரூர் பள்ளிக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு வந்து விட்டோம்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத் தின் குப்பன்கொட்டாய் கிளைத் துணை செயலாளர் அரசன், ‘‘பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்தச் சமையலர் பணிக்காக இன்னொருவரிடம் மூன்று லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். அந்தப் பணிக்கு ஜோதி வந்ததால், சாதி உணர்வைத் தூண்டி யுள்ளார்.’’ என்றார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி யிடம் கேட்டதற்கு, ‘‘ஊர் மக்களில் சிலர் சமையலர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள் என்றனர். நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்க வில்லை. இறுதியாக, ‘உங்கள் கோரிக்கையை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள்’ என்றேன். அதை என் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினேன்’’ என்றார். குப்பன் கொட்டாய் கிராமத்தின் ஊர்க் கவுண்டர் மாணிக்கம், ‘‘நாங்க தாயா பிள்ளையா பழகுறோம். சின்னப் பசங்க விவரம் இல்லாம இந்தக் காரியத்தைப் பண்ணிட்டாங்க. என்னையும் ரெண்டு நாளு உள்ளே வெச்சிருந்து இன்னைக்குத்தான் அனுப்பினாங்க. எங்களை யாரும் தூண்டி விடல.’’ என்றார்.

“அவங்க சமைச்சதை எங்க குழந்தைங்க சாப்பிட்டா தீட்டு!”

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணியிடம் விசாரித்தபோது, ‘‘யாரெல்லாம் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களோ, அவர்கள்மீது வழக்கு போட்டுள்ளோம். தலைமை ஆசிரியர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிப் பாகுபாடு பார்ப்பது தவறானது. இதுபோன்ற இழிச்செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள்மீது நடவடிக்கை பாயும்’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism